2019 இல் மின்சார மரணங்கள் அதிகரிப்பு :  எச்சரிக்கும் அறிக்கை – இ.பொ.ஆ  அறிக்கை
புதன், 12 பிப்ரவரி 2020 |

இலங்கை 2019 ஆம் ஆண்டில் மின்சார விபத்துக்கள் காரணமாக 103 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது, இது 2018 ஆம் ஆண்டிலிருந்த 89 இறப்புகளாக அதிகரித்துள்ளது என்று மின்சாரத் துறையின் ஒழுங்குறுத்துகை நிறுவனமான இலங்கையின் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள மின்சார விபத்துக்கள் அறிக்கை 2019 இல் தெரிவித்துள்ளது.2019 ஆம் ஆண்டில் இலங்கையின் தென் மாகாணத்தில் மின்சாரத்தின் காரணமாக அதிக உயிரிழப்புகளைப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது 2018 ஆம் ஆண்டிலிருந்த 89 இறப்புகளாக அதிகரித்துள்ளது என்று மின்சாரத் துறையின் ஒழுங்குறுத்துகை நிறுவனமான இலங்கையின் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள மின்சார விபத்துக்கள் அறிக்கை 2019 இல் தெரிவித்துள்ளது.2019 ஆம் ஆண்டில் இலங்கையின் தென் மாகாணத்தில் மின்சாரத்தின் காரணமாக அதிக உயிரிழப்புகளைப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.2019 ஆம் ஆண்டில் மின்சாரம் காரணமாக தென் மாகாணத்தில் 30 இறப்புகள் பதிவாகியுள்ளன. மிகக் குறைவான மின்சார மரணம் மேற்கு மாகாணத்தில் பதிவாகியுள்ளது. 2015-2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மின்சாரம் காரணமாக 97 இறப்புகள் தென் மாகாணத்தில் பதிவாகியுள்ளன, அதே காலப்பகுதியில் ஏனைய மாகாணங்களில் பதிவான மின்சார மரண வீதங்களுடன் ஒப்பிடும்போது இது நாட்டில் ஏற்பட்ட மிக உயர்ந்த தொகையாக கருத்தப்படுகிறது.
விளைநிலங்களை பாதுகாப்பதற்காக அல்லது வன விலங்குகளை கொல்வதற்காக சட்டவிரோத மின் இணைப்புகளை ஏற்படுத்துவது போன்ற சில காரணங்கள் நாட்டில் இந்த மின்சார உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன, மேலும்,  வீடுகள் / காரியாலயங்களில் சிறிய அளவிலான மின்சார பழுதுபார்ப்பு பணிகள் மற்றும் மின் இணைப்புகளுக்கு அருகில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளும் இந்த மின்சார விபத்துக்களுக்கு காரணங்களாக அறியப்பட்டுள்ளன.
நாட்டின் மின்சார பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பல பாதுகாப்பு விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், இலங்கையில் உள்ள அனைத்து கிராமங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாதுகாப்பு தூதர்களின் தேசிய வலையமைப்பை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.
இத்துடன் அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.மேலதிக தகவல்களுக்கு ஜெயசூரியன், உதவிப்பணிப்பாளர் -பெருநிறுவன தொடர்பாடல் பிரிவு (0770 399 119)