இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை தனியார் மின்சார நிறுவனம் (லெகோ) ஆகியவை பாவனையாளர்களுக்கான மாதாந்த மின்சார கட்டணபட்டியலை வழங்கவும், கட்டணத்தை செலுத்துவதற்கான நியாயமான சலுகை காலத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்களை இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை தனியார் மின்சார நிறுவனம் (லெகோ) ஆகிய நிறுவனங்கள் செயல்படுத்தும். மின்சார கட்டண பட்டியல்களை வழங்குவதில் தாமதம் இருந்தபோதிலும், சலுகை விகிதத்தில் பாவிக்கப்பட்ட அலகுகளின் எண்ணிக்கை (விகிதாசார முறையின்படி) இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை தனியார் மின்சார நிறுவனம் (லெகோ) ஆகியவற்றால் சில பாவனையாளர்களின் முறைப்பாடுகளுடன் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் அமுலிலிருந்த காலத்தில் மின்சார கட்டண பட்டியல் பெறப்படாவிட்டாலும், இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை தனியார் மின்சார நிறுவனம் (லெகோ) ஆகியவை மின்சார பாவனையாளர்களுக்கான மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றன. எதிர்காலத்தில் தொடர்ச்சியான தடையற்ற, தரமான மின்சார சேவையை வழங்க இந்த நிறுவனங்களின் நிதி நிலையை மீட்டெடுக்க வேண்டும். இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை தனியார் மின்சார நிறுவனம் (லெகோ) அதன் வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பல மாதங்களாக வழங்கப்பட்ட மின் கட்டணங்களை உடனடியாக பணம் செலுத்துவதன் மூலம் இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை தனியார் மின்சார நிறுவனம் (லெகோ) ஆகியவற்றின் பாவனையாளர்களுக்கு அவற்றின் நிதி நிலையை சிறப்பாக பராமரிக்க உதவ முடியும் என்று இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துக்கொள்கின்றது.
ஊரடங்கு சட்டம் அமுலிலிருந்த காலத்தில் மின்சார பாவனையாளர்கள் தங்கள் மின்சார கட்டண பட்டியலைத் தயாரிக்கும்போது அதிகபட்ச சலுகையை உறுதி செய்வதற்காக தங்கள் மின்சார கட்டண பட்டியலைத் தயாரிப்பது, கணக்கிடுவது தொடர்பாக பின்வரும் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுகின்றன.
சலுகை மின் அலகு உரிமையை உறுதிபடுத்தும் விகிதார முறைக்கான உதாரணம்
இரண்டு மாத காலத்திற்கான மொத்த மின் பாவனை 120 அலகுகள் எனின், முதல் 60 அலகுகளுக்கு ரூபாய் 2.50 வீதமும், அடுத்த 60 அலகுகளுக்கு ரூபாய் 4.85 வீதமும் கணக்கிடப்படும். அதன்போது ஒவ்வொரு மாதத்திற்குமான நிலையான கட்டணம் ரூபாய் 60 வீதம் ரூபாய் 120 ஆகும். இந்த உதாரணத்திற்கேற்ப இரண்டு மாதத்திற்கு பின்னர் மின் வாசிப்பு மேற்கொள்ளப்படுமாயின் பாவனையாளருக்கு அந்த இரண்டு மாதங்களுக்கென இரண்டு மின் பட்டியல்கள் வௌ;வேறாக வழங்கப்படும். அதற்கேற்ப முதல் மாதத்திற்கான கட்டணம் ரூபாய் 280.50 ஆகக் காணப்படுவதுடன், அடுத்த மாதத்திற்கான கட்டணம் ரூபாய் 280.50 எனக் குறிப்பிடப்பட்டு இரண்டு மின் பட்டியல்கள் வழங்கப்பட்டிருக்கும். அதற்கு மேலதிகமாக மின் கட்டணங்களை செலுத்துவதற்காக வழங்கப்படும் சலுகை காலம் தொடர்பில் பாவனையாளருக்கு அறிவிக்கப்படும்.
ஒரு மாதத்திற்கு 60 அலகுகள் என்ற சாதாரண பாவனையை கொண்ட பாவனையாளருக்கு ஒரே தடவையில் இரு பட்டியல்களை வழங்கும் போது கீழ் காணப்படும் முறையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கு இரு மாதங்களுக்கு ஒரே தடவையில் மின் பட்டியல் தயாரிக்கும்போது கணக்கிடப்படும் முறை
ஒரு மாதத்திற்கு |
ஒரு மாதத்திற்கு இரு மாதங்களுக்கு ஒரே தடவையில் மின் பட்டியல் தயாரிக்கும்போது கணக்கிடப்படும் முறை |
||||||
அலகு வகை |
அலகுகளின் எண்ணிக்கை |
அலகிற்கான விலை |
கட்டணம் |
அலகு வகை |
அலகுகளின் எண்ணிக்கை |
அலகிற்கான விலை |
கட்டணம்;
|
0-30 |
30 |
2.50 |
75.00 |
0-30 |
60 |
2.50 |
150.00 |
31-60 |
30 |
4.85 |
145.50 |
31-60 |
60 |
4.85 |
291.00 |
மாதாந்த நிலையான கட்டணம் |
|
|
60.00 |
மாதாந்த நிலையான கட்டணம் |
|
|
120.00 |
மொத்த கட்டணம் |
|
|
280.50 |
மொத்த கட்டணம் |
|
|
561.00 |
ஊடக அறிக்கை மற்றும் வழிகாட்டல் ஆவணத்தை தரவிறக்கம் செய்ய