மின்சார நுகர்வோர்

மின்சார நுகர்வோர் தகவல் பக்கத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!

மின்சார நுகர்வோருக்கு சாதாரணமாகவும் நியாயமானதாகவும் சேவைகள் கிடைக்கின்றனவா என்பது தொடர்பில் ஆணைக்குழுவின் போதித்தல் மற்றும் நுகர்வோர் சார்ந்த பிணக்குகள் தீர்த்தல் நடைமுறையினூடாக உறுதி செய்துகொள்ளும் பொறுப்பு இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்குச் (ஆணைக்குழு) சாட்டப் பட்டுள்ளது. இந்தச் சிறப்புப் பணிகளின் ஒரு பாகமாக, உங்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குவதும், ஒழுங்குறுத்துகை நடபடிமுறை பற்றிய உங்களது அறிவை வலுவடையச்செய்வதும் இந்த ஆணைக்குழுவினது பொறுப்பாக விளங்குகின்றன.

உங்களது முறைப்பாடுகளைத் தீர்த்துவைத்தலும் உங்களது உரிமைகளும் கடமைகளும் பற்றி உங்களுக்குப் போதித்தல்.

கைத்தொழில் சம்பந்தப்பட்ட விடயங்களில் உங்களது அறிவை வலுவடையச்செய்யும் பொருட்டு அந்தக் கைத்தொழில்களை நாம் ஒழுங்குறுத்தி எங்களது ஒழுங்குறுத்துகை நடபடிமுறைக்கான உங்களது பங்கேற்பையும் நாம் பெற்று வருகின்றோம். ஆகையால், நாம் இந்த ஆணைக்குழுவின் கீழ் ஒரு நுகர்வோர் ஆணைக்குழுவையும் பிராந்திய மட்டத்தில் நுகர்வோர் சங்கங்களையும் தாபித்துள்ளோம்.