நீரை களஞ்சியப்படுத்தும் சாதனங்கள் (water fittings) [தொட்டிகள், நீர் குழாயை திறந்து மூடும் மூடிகள்(Taps), உலோக தடுக்கிதழ்கள் (Stop Valves Metal) பிவிசி குழாய்கள்(PVC)] தொடர்பாக வரைவு ஒழுங்குறுத்தலை மேற்கொள்வதற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்டல்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

நீரை களஞ்சியப்படுத்தும் சாதனங்கள் (water fittings) [தொட்டிகள், நீர் குழாயை திறந்து மூடும் மூடிகள்(Taps), உலோக தடுக்கிதழ்கள் (Stop Valves Metal) பிவிசி குழாய்கள்(PVC)] தொடர்பாக வரைவு ஒழுங்குறுத்தலை மேற்கொள்வதற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்டல்

Tamil_Draft_Water_Fittings_PC
Tamil-Appendix A-water fittings

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (இ.பொ.ப.ஆ) 2002 இன் 35 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் நாட்டில் பல்துறைசார் ஒழுங்குறுத்துகை நிறுவனமாக திகழ்கிறது. 2009 இன் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் பிரகாரம் மின்சாரத்துறையில் ஒழுங்குறுத்துகை, மின்சார துறையின் பொருளாதாரம், பாதுகாப்பு முகாமைத்துவ ஒழுங்குறுத்துகை மேற்கொள்ளும் அதேநேரம் நீர் சார் துறைகள் மற்றும் பெற்றோலியதுறை ஒழுங்குறுத்துகையை மேற்கொள்ளும்
பெயர்குறிப்பிட்டுள்ள ஒரு ஆணைக்குழுவாகவும் விளங்குகிறது.

இலங்கையில் தரமான நீர் களஞ்சியப்படுத்தும் சாதனங்களை இறக்குமதி செய்யவும் ஏற்றுமதி செய்யவும் அவற்றின் தரநிலையை உறுதிப்படுத்துவதற்காகவும், பங்குதாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஒழுங்குறுத்துகை முகவர்கள் இணைந்து சிறந்த செயல்வடிவ சுற்றுச்சூழலை உருவாக்கும் நோக்குடனும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (இ.பொ.ப.ஆ) இலங்கையில் தரமான நீரை களஞ்சியப்படுத்தும் சாதனங்களை மறுசீரமைப்புசெய்யும் நடவடிக்கைகளை தயாரித்துள்ளது. தற்பொழுது இலங்கை சந்தையில் இவற்றை வாங்குவதற்கான சர்ந்தர்ப்பங்களும் கிடைக்கின்றன.

இது தொடர்பான ஆலோசனை பத்திரம் பற்றிய வரைவு தேசிய கொள்கையானது அமைச்சின் இணையத்தளத்திலும் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் குறித்த விடயம் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதிக்கு முன்னர் துறைசார்ந்தவர்களிடமிருந்தும் பொது மக்களிடமிருந்தும் எழுத்துமூலமாக அழைக்கப்படுகின்றன. எழுத்துமூல கருத்துக்களை மின்னஞ்சல் மூலமாகவும் தொலைநகல் அல்லது பதிவு தபால் மூலமாகவும் அனுப்பமுடியும்.

வாய்மொழிமூல ஆலோசனைகள், கருத்துக்கள் மற்றும் சமர்ப்பிப்புக்கள் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதி புதன்கிழமை காலை 8.30 மணி முதல் 2.30 மணி வரை கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும். வாய்மொழிமூல ஆலோசனைகள், கருத்துக்கள் மற்றும் சமர்ப்பிப்புக்களை வழங்கவுள்ளவர்கள் தங்களை பதிவு செய்ய தொலைபேசிமூலம் 0764271030 எனும் இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும்.

தலைவர்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
6ஆவது மாடி, இலங்கை வங்கி வர்த்தக கோபுரம்,
இல.28, சென். மைக்கல் வீதி,
கொழும்பு 03
தொலைபேசி: 011-2392607/8
பெக்ஸ்: 011-2392641
இணையத்தளம்: www.pucsl.gov.lk
மின்னஞ்சல்:consultation@pucsl.gov.lk
முகநூல்: www.facebook.com/pucsl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *