இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
2009ம் ஆண்டு 20ம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 12 (1) (அ)
பிரிவின் கீழ் விடுக்கப்படும் அறிவித்தல்
உரிமத்தை நீட்டிப்பதற்கான உத்தேசம்
2009ம் ஆண்டு 20ம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 12 (1) (அ) பிரிவிற்கமைய, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (“ஆணைக்குழு”) ஆனது இத்தால் அறியச் செய்வது யாதெனில், பின்வரும் நபருக்கு, மின்சாரத்தைப் பிறப்பிக்கும் நோக்கத்தில், நுகர்வோருக்கு மின்சார வழங்கலின் தயார்நிலை மற்றும் தொடர்ச்சியான தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, மின் பிறப்பாக்க உரிமத்தை நீட்டிக்கத் தீர்மானித்து உள்ளது என்பதாகும்.
விண்ணப்ப இலக்கம் | விண்ணப்பதாரி | நிலையம் / வசதிக்கான பெயர் | கொள்ளளவு
(MW) |
தொழினுட்பம் | நீட்டிப்பு காலம். வரை |
E/AL/N/18/20 | மார்க் ஹைட்ரோ (பிரைவெட்) லிமிடெட் | கெரோலினா 11 மினி ஹைட்ரோ மின் ஆலை | 1.3 | மினி
ஹைட்ரோ |
13 ஜூன் 2022 |
E/AL/N/18/36 | லோட்டஸ்
ஹைட்ரோ பவர் பில்சி |
சந்குஹார் மினி ஹைட்ரோ மின் ஆலை | 1.6 | மினி
ஹைட்ரோ |
01 டிசம்பர் 2023 |
மேற்குறிப்பிட்ட முன்மொழிவுகள் தொடர்பான, ஆட்சேபனைகள் (ஏதுமிருப்பின்) அறிவித்தல் வெளியிடப்பட்டு இருபத்து எட்டு (28) நாட்களுக்குள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலமாக அறிவிக்கலாம். அத்துடன் ஆட்சேபனைகளை முன்வைக்கும் போது விண்ணப்பக் குறிப்பு இலக்கத்தினைக் குறிப்பிட்டு முன்வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
தலைவர்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
6-வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம், 28, புனித மைக்கல்ஸ் வீதி, கொழும்பு 03.
தொலைபேசி: (011) 2392608, தொலைநகல்: (011) 2392641
மின்னஞ்சல்: licensing@pucsl.gov.lk இணையத்தளம்: www.pucsl.gov.lkதிகதி: 2019.01.29