2020 மற்றும் அதற்கும் அப்பால் இலங்கையின் மின்சார வழங்கல்

(19/09/2017) – குறை செலவு – நீண்டகால மின் பிறப்பாக்க விரிவாக்கத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் காரணமாக, செலவின் மிகையோட்டம் திட்டமிடப்படாத மின் கொள்முதல் ஆகியன கடந்த ஆண்டுகளில் இடம்பெற்றுள்ளன. மேலும், இத்திட்டத்தின் நடைமுறைப்படுத்தல் இல்லாத பட்சத்தில் இந்த விளைவுகள் அடுத்த சில ஆண்டுகளிலும் தொடரும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்ட “2020 மற்றும் அதற்கு அப்பால் மின் வழங்கல்: சவால்கள் மற்றும் பரிந்துரைகள்” எனும் அறிக்கையானது, நீண்ட காலத்திற்கு இலங்கையில் நிலைபேறான வகையில் மின்சக்தி கிடைப்பதற்காக, குறைந்த காலம், நடுத்தர காலம் மற்றும் நீண்ட கால தீர்வுகளை பரிந்துரைப்பது குறிப்பிடத் தக்கதாகும். இவ்வறிக்கையானது நாட்டின் மின்சார வழங்கல் நிலமை, எதிர்வு கூறப்பட்ட தரவு, மின்னிலைய அட்டவணை ஆகியவறை பகுப்பாய்வு செய்துள்ளது. அத்துடன் இவ்வறிக்கை மூலம் 2006 – 2016 காலப்பகுதிக்கான நீண்டகால மின் பிறப்பாக்க விரிவாக்கத்திட்டம் தயாரிக்கப்பட்ட முறை பற்றியும் அறிய முடிகிறது.

”அடிப்படைத் தேவைப்பாட்டுடனான நிச்சயமற்ற தன்மையுடனான எதிர்வுகூறல் ஆனது 2011ம் ஆண்டுக்கான திட்டத்தில் காணக்கூடியதாக உள்ளது. எவ்வாறாயினும் இலங்கை மின்சாரசபை இதை ஒரு பிரச்சனையாக இனங்கண்டதுடன், புதிய எதிர்வுகூறல் கருவிகளின் துணைகொண்டு, அடிப்படைத் தேவைப்பாட்டு எதிர்வுகூறலின் செம்மையை மேம்படுத்த முயல்கின்றது. இருந்தபோதும் இயல்பிலேயே மின் தேவைப்பாடானது உலகளாவியரீதியில் நீண்ட காலப் பகுதியில் அதிக நிகழ்தகவுள்ளதாக உள்ளது.” என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், தற்போதைய நிலையை எதிர்வு கூறியுள்ளதான எந்தவொரு பிறப்பாக்கத்திட்டமும் இப்பகுப்பாய்வில் பரிசீலிக்கப்படவில்லை. அதனால் மெய்யான விளைவானது கடந்த திட்டங்களில் பெறப்பட்ட விளைவை விடவும் வித்தியாசமாக இருந்தது.

கட்டுவதற்குத் திட்டமிடப்பட்ட மின்னிலையங்கள் உரிய காலப்பகுதியில் கட்டப்படாமையால் எதிர்பாராத சக்திக் கொள்முதலுக்கும் சக்திக் கலவையை மாற்றுவதற்குமான தேவை எழுந்தது. இதன்மூலம் மின்சாரத்தின் ஓர் அலகிற்கான சராசரி கட்டணம் அதிகரித்தது. எண்ணெய் உபயோகிக்கும் மின் நிலையங்களிலிருந்து 2016ல் பெற்ற மெய்யான மின் கொள்முதல்கள், அவ்வாண்டில் பெறத்திட்டமிடப்பட்ட அளவை விட 6 மடங்கு அதிகமாகும். இவ்வறிக்கையினை இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிடலாம்.