2019 ஆம் ஆண்டுக்கான வருடாந்த நடவடிக்கைத் திட்டம் வெளியிடல்

ஊடக அறிவித்தல்

2019 ஆம் ஆண்டுக்கான வருடாந்த நடவடிக்கைத் திட்டம் வெளியிடல்

2019 வருடாந்த நடவடிக்கைத் திட்டம் தரவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்கு 2019 ஆம் ஆண்டுக்கான வருடாந்த நடவடிக்கைத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. மின்சார தொழிற்துறை மற்றும் நீர்சார் தொழிற்துறை, கனியவளம் சார்ந்த துறைகளின்  தரம் மற்றும் சூழலுக்கேற்ற மாற்று ஒழுங்குறுத்துகை நடவடிக்கை போன்றவற்றை கருத்திற்கொண்டு செயற்படவுள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆனது, 2002 ம் ஆண்டு 35 ம் இலக்கச் மற்றும் 2009  ஆண்டு 20 ம் இலக்க மின்சாரச் சட்டத்தின் அடிப்படையில் வரைவுகளை திட்டமிடல், குறிக்கோள்,  பணி இலக்கு மற்றும் நிறுவனத்தின் வெளிப்பாடுகள், திட்டமிடல்கள் ஆகியவற்றுடன் பொதுமக்கள், அத்துறைசார்ந்தவர்களின் வெளிப்பாடுகள் போன்றவற்றை பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மின்சாரத் துறையின் ஒழுங்குருத்துகை நிறுவனம் என்ற வகையில் 2019 ஆம் ஆண்டுக்கான வருடாந்த நடவடிக்கையில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நீண்ட கால குறிக்கோள்கள் பலவற்றையும், நீர்சார்ந்த துறைகள் மற்றும் கனியவளம் என்பவற்றுக்கான முன்  ஆயத்த நடவடிக்கைகள், பொதுமக்கள் மற்றும் துறைசார்ந்தவர்களின் (பங்காளர்கள்) கருத்து கேட்கும் நிகழ்வு என்பவற்றையும் இனங்கண்டு உள்ளது.

குறித்த இலக்குகளை அடையவும் தடைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து தரவுகளாக்கப்பட்டுள்ளது.சில நடவடிக்கைகள் ஒரு வருடத்துக்கும் மேலாகவும் இன்னும் சிலவற்றுக்கு ஒரு வருடத்துக்கும் மேலாக செல்லக்கூடிய நடவடிக்கைகளும் உள்ளன. 2019 ஆம் ஆண்டு

வருடாந்த நடவடிக்கைகளுக்கான மொத்த பட்ஜெட் 324 மில்லியன் ரூபாய். இதில் 107 நடவடிக்கைகள் உள்ளடக்கப்பட்டு உள்ளன. அடையவேண்டுய மட்டம், அதன் தினசரி நடவடிக்கைகளுக்கானவெளிப்பாடு, நோக்கம் என்பனவற்றுடன் பாவனையாளர் ஆலோசனைகுழு ஆகியவற்றிற்கும் பொறுப்பாக்கப்பட்டுள்ளன.

ஒன்பது பிரிவுகள் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லவுள்ளன. கொள்வனவு திட்டத்துடன் இவை வருடாந்த அறிக்கை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.மனிதவள அபிவிருத்தி மற்றும் உள்ளக கணக்காய்வு பிரிவுகளும் இதற்குள் உள்வாங்கப்பட்டுள்ன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *