பிணக்குகள் தீர்த்தல் முறைமைக்கான பிரவேசம்

நியதிகளும் ஒழுங்கு விதிகளும்

சட்டதிட்டங்கள்/ஒழுங்குவிதிகள்

மின்சாரம் தொடர்பான பிணக்குகள் தீர்த்தல் நடைமுறை தொடர்பான ஒழுங்குவிதிகள்

2011 ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட1707/25 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானி மூலம் இந்த ஒழுங்குவிதிகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

மின்சார வரித்தீர்வை தொடர்பான பிரேரணை மீளாய்வு பற்றிய ஒழுங்குவிதிகள் (வரைவு மட்டத்தில் காணப்படுகின்றன)-(ஆங்கில மொழியில்)

மின்சார அனுமதிப்பத்திரம் பெற்ற தரப்புகளினால் முன்வைக்கப்படுகின்ற வரித்தீர்வைத் திருத்தம் தொடர்பான பிரேரணை மீளாய்வின் போது அடிப்படையாகக் கொள்ளப்பட வேண்டிய கோட்பாடுகள், கால அட்டவணைகள், ஒழுங்குறுத்துகை அதிகாரியின் பொறுப்புக்கள் கடமைகள் என்பன இதில் அடங்குகின்றன.


மின்சார அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் விண்ணப்பித்தல், அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல், அனுமதிப்பத்திரங்களைப் பெறவேண்டிய தேவைப்பாட்டிலிருந்து விலக்களித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பான ஒழுங்கவிதிகள்

மின்னுற்பத்தி, மின்சார செலுத்துகை, மின்சாரப் பகிர்ந்தளிப்பு ஆகிய செயற்பாடுகளுக்கான அனுமதிப்பத்திரம் அல்லது அந்த அனுமதிப்பத்திரத்தைப் பெறவேண்டிய தேவைப்பாட்டிலிருந்து விலக்களித்தல் ஆகியன தெடர்பில் விண்ணப்பிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் பற்றிய விபரங்களும் விண்ணப்ப மாதிரிப்படிவங்கள் பற்றிய விபரங்களும் இதில் உள்ளடங்குகின்றன.

மின்சார நுகர்வோர் ஆலோசனைக் குழு தொடர்பான ஒழுங்குவிதிகள்

இந்தக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய இந்த ஒழுங்குவிதி 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

மின்-பரிசோதகர்களின் தொழிற்பாடுகள், கடமைகள் மற்றும் நடைமுறைகள் என்பன தொடர்பான ஒழுங்குவிதிகள்(வரைவு மட்டத்தில் காணப்படுகின்றன)-(ஆங்கில மொழியில்)

மின்சார மானிவாசிப்புக்கருவிகள் தொடர்பான ஒழுங்குவிதிகள்(வரைவு மட்டத்தில் காணப்படுகின்றன)-(ஆங்கில மொழியில்)

மின் செயல்திறன் (பகிர்ந்தளிப்பு) நியமங்கள் தொடர்பான ஒழுங்கவிதிகள்(வரைவு மட்டத்தில் காணப்படுகின்றன)-(ஆங்கில மொழியில்)

மின் பாதுகாப்பு, தரம் மற்றும் தொடர்தன்மை ஆகியன தொடர்பான ஒழுங்குவிதிகள்(வரைவு மட்டத்தில் காணப்படுகின்றன)-(ஆங்கில மொழியில்)

க்றிட் மின்சார விதிக்கோவை-(ஆங்கில மொழியில்)

மின்சார விநியோக விதிக்கோவை(வரைவு மட்டத்தில் காணப்படுகின்றன)-(ஆங்கில மொழியில்)

ஒழுங்குறுத்துகை பற்றிய கைந்நூல்-(ஆங்கில மொழியில்)

குறியீடுகள் / முறையியல்கள்

மின்சார வரித்தீர்வை முறையியல்-(ஆங்கில மொழியில்)

மின்சார அனுமதிப்பத்திரம் பெற்ற தரப்புகளினால் மின்சார வரித்தீர்வைத் திருத்தங்கள் மேற் கொள்ளப்படுகின்ற போது அடிப்படையாகக் கொள்ளப்பட வேண்டிய முறையியல்கள் பற்றிய விபரங்கள் இதில் அடங்குகின்றன.

ஏனைய கட்டணங்களும் நிர்ணய முறையியல்களும்-(ஆங்கில மொழியில்)

புதிதாக மின்சார இணைப்புகளை வழங்குதல், மின்சார இணைப்புகளைத் துண்டித்தல், மின்சார மாணிவாசிப்புகள் பரிசீலனை முதலிய பல விடயங்களை நிறைவேற்றும் போது ஏற்படுகின்ற செலவுகளை மின்சார இணைப்பைப் பெறுகின்ற தரப்புகளிடமிருந்து அறவிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனுமதிக்கப்பட்ட முறையியலுக்கு அமைய இந்தச் செலவுகள் நிர்ணயிக்கப்படுதல் வேண்டும்.

மரபுரீதியற்ற மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வள மூல மின்சாரத்திற்கான விலையை நிர்ணயிக்கின்ற முறையியல்கள)-(ஆங்கில மொழியில்)

மின்சார செலுத்துகை அனுமதிப்பத்திரம் பெற்ற தரப்பு என்ற ரீதியில் இலங்கை மின்சார சபை உரிய விலையை நிர்ணயிக்க வேண்டிய அடிப்படை பற்றிய விபரங்கள் இதில் அடங்குகின்றன.

மின்சாரப் பகிர்ந்தளிப்பு விதிக்கோவை-(ஆங்கில மொழியில்)

அனுமானங்கள்