பிணக்குகள் தீர்த்தல் முறைமைக்கான பிரவேசம்

உராய்வுநீக்கி எண்ணெய் சார் சந்தை

மறைமுக ஒழுங்குறுத்துநர் என்ற வகையில், இ.பொ.ப.ஆ உராய்வுநீக்கி எண்ணெய் சார்ந்த கைத்தொழிலை தாரளமயப் படுத்தல் தொடர்பில் கொள்கை மற்றும் ஒழுங்குறுத்துகை விடயங்கள் பற்றி பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. 2006 ஆம் ஆண்டில் இந்த உராய்வுநீக்கி எண்ணெய் சார்ந்த சந்தை மேலும் தாராளமயப்படுத்தப்பட்ட போது, சந்தைக்கு அனுமதிக்கப்படுகின்ற சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களைப் பூர்த்தி செய்கின்ற தரமான உராய்வுநீக்கி எண்ணெய்யை மாத்திரம் உறுதிசெய்துகொள்ளும் நிமித்தம் கொள்கை வேலைச்சட்டகத்தையும் சந்தைப் பிரவேசத் தகவுதிறன்களையும் வகுத்தமைப்பதில் இ.பொ.ப.ஆ பெற்றோலிய கைத்தொழில் அமைச்சுக்கு ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கிப் பங்களித்தது. தேந்தெடுக்கப்பட்ட சந்தைப் பங்குபற்றுநர்களுடன் தேவையான உடன்படிக்கைகளைச் செய்துகொள்ளுவதிலும் இ.பொ.ப.ஆ பெற்றோலிய கைத்தொழில் அமைச்சுக்கு உதவியது.
சர்வதேச சந்தையில், உராய்வுநீக்கி எண்ணெய்களின் தரம் அமெரிக்கப் பெற்றோலிய நிறுவகம், ஜப்பான் வாகன நியமங்கள் நிறுவனம் முதலியவற்றினால் நிரவகிக்கப்படுகின்றது. இலங்கையிலுள்ள உராய்வுநீக்கி எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகளுக்கான ஆகக்கூடிய நியமங்களாக குறிப்பீடுசெய்யப்பட்டுள்ள பிரதான உராய்வுநீக்கி எண்ணெய் வகுதிகள் மற்றும் கொழுப்புகள் என்பவற்றுக்கான இலங்கை நியமங்களை இலங்கை நியமங்கள் கட்டளை நிறுவகம் தயாரித்துள்ளது. இலங்கை நியமங்கள் கட்டளை நிறுவகத்தின் மூல இலங்கை நியமங்கள் தயாரித்தல் விடயத்தை இ.பொ.ப.ஆ ஒருங்கிணைப்புச் செய்து, குறித்த நியமங்கள் குழுவை தனது உறுப்பு அமைப்பாகவும் மதித்துள்ளது.

உராய்வுநீக்கி எண்ணெய்களுக்கு தரமான நியமங்களிருக்கின்றனவா?

சர்வதேச சந்தையில், உராய்வுநீக்கி எண்ணெய்களின் தரம் அமெரிக்கப் பெற்றோலிய நிறுவகம், ஜப்பான் வாகன நியமங்கள் நிறுவனம் (JASO) மற்றும் தனியாள் உபகரண உற்பத்தித் தரப்புகள் முதலியவற்றினால் வெளியிடப்படும் நியமங்களினால் நிருவகிக்கப்படுகிள்றது.

இலங்கையிலுள்ள உராய்வுநீக்கி எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகளுக்கான ஆகக்கூடிய நியமங்களாக அரசாங்கம் குறிப்பீடுசெய்துள்ள பிரதான உராய்வுநீக்கி எண்ணெய் வகுதிகள் மற்றும் கொழுப்புகள் என்பவற்றுக்கான இலங்கை நியமங்களை இலங்கை நியமங்கள் கட்டளை நிறுவகம் தயாரித்துள்ளது.

தற்பொழுது செல்லுபடியான நியமங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

உராய்வுநீக்கி எண்ணெய் வகை ஆகக்கூடிய நியமம் சர்வதேச நியமத்திற்குச் சமனான நியமம் ஆகக்கூடிய நியமங்களுக்கு மேலான நியமங்கள்

கசலைன் என்ஜின் ஒயில்

SLSI 1374/2009

API SJ

API SL, API SM

டீசல் என்ஜின் ஒயில்

SLSI 1373/2009

API CF

API CF-2, API CG-4, API CH-4, API CL-4, API CJ-4

ட்டூ ஸ்ட்ரோக் என்ஜின் ஒயில்

SLSI 1446/2012

JASO FC

JASO FD

போf ஸ்ட்ரோக் மோட்டார் சைக்கில் என்ஜின் ஒயில்

SLSI 1409/2011

API SG and JASO MA

API SL and JASO MA , API SM and JASO MA, API SL and JASO MA

தானியியக்க ஜியர் ஒயில்

SLSI 1396/2010

API GL 4

API GL 5, API GL 6

தானியக்கச் செலுத்துகை ஒயில்

DEXRON IID, DEXRON III MERCON, ALLISON C4, JASO M315 வகை A

DEXRON IID, DEXRON III MERCON, ALLISON C4, JASO M315 வகை A

OEM சிபாரிசுசெய்த எண்ணெய்கள்

கொழுப்பு/க்றீஸ்

SLSI 1424/2011

NLGI LA

NLGI LB, NLGI GA, NLGI GB NLGI GC

API – அமெரிக்க பெற்றோலிய நிறுவகம்
JASO – ஜப்பான் வாகன நியமங்கள் நிறுவனம்
DEXRON – ஜெனெரல் மோட்டார்ஸ் இன்டர்நெஷனல் கம்பனியினால் தயாரிக்கப்பட்ட நியமம்
MERCON – போர்ட் மோட்டார் கம்பனியினால் தயாரிக்கப்பட்ட நியமம்
ALLISON – அலிஸென் ட்ரான்ஸ்மிஷன் கம்பனியினால் தயாரிக்கப்பட்ட நியமம்
NLGI – ஐ.அ தேசிய உராய்வுநீக்கி எண்ணெய் கொழுப்புகள் நிறுவகம் தயாரித்த நியமம்

உராய்வுநீக்கி எண்ணெய் சார்ந்த சந்தை ஒழுங்குறுத்தப்படுவது எவ்வாறு?

2002 இன் 33 ஆம் இலக்கப் பெற்றோலிய உற்பத்திகள் (விஷேட ஏற்பாடுகள்) சட்டம் மற்றும் 1961 இன் 28 ஆம் இலக்க இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனச் சட்டம் ஆகிய சட்டங்களினால் உராய்வுநீக்கி எண்ணெய் சார்ந்த சந்தை ஒழுங்குறுத்தப்படுகின்றது.

கொழுப்புகள் (க்றீஸ்கள்) அடங்கலாக உராய்வுநீக்கி எண்ணெய்களின் இறக்குமதி, ஏற்றுமதி, எண்ணெய்கள் கலத்தல், உற்பத்தி, விற்பனை, விநியோகம் மற்றும் பகிர்ந்தளிப்பு முதலிய நடவடிக்கைகள் அரசாங்கத்திடமிருந்து பெறவேண்டிய குறித்த அதிகாரத்தைத் தேவைப்படுத்துகின்றன.

உப-நியம உற்பத்திகள் சந்தையில் பிரவேசிக்கக்கூடாது என்பதை உறுதிசெய்துகொள்ளும் பொருட்டு உரிய தொழில் நுட்ப அறிவையும் போதிய நிதிசார் ஆற்றலையும் கொண்டுள்ள தகுதிவாய்ந்த தரப்புகளுக்கு மாத்திரம் இந்த அதிகாரம் வழங்கப்படுகின்றது.

ஆகையால், உராய்வுநீக்கி எண்ணெய்களைப் பாவிக்கும் போது, அதிகாரமளிக்கப்பட்ட தரப்புகளினால் உற்பத்தி செய்யப் பட்டு சந்தைப்படுத்தப்படுகின்ற உராய்வுநீக்கி எண்ணெய்களை மாத்திரம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வர்த்தகக்குறியீடு (கள்) பிரதிநிதித் தரப்பு பிரதிநிதித் தரப்பின் தொடர்புகொள்ள வேண்டிய விபரங்கள்


(BP, Castrol – கஸ்ட்ரோல்)

அசோசியேற்று மோட்டார்வேயிஸ் ப்ரைவட் லிமிற்றட்

தொ.பே: 011-2309389
மின்னஞ்சல்: bpcastrol@amwltd.com


(Hyrax – ஹைராக்ஸ்)

இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

தொ.பே:011-5663314, 077-2932815
மின்னஞ்சல்: krishantha@ceypetco.gov.lk


(Motul – மொட்டுல்)

டையனமிக் மோட்டர்ஸ் லிமிற்றட்

தொ.பே: 011-4343744
மின்னஞ்சல்: nadun@dynamic.lk

(Caltex – கல்டெக்ஸ், Chevron – செவ்ரொன், Texaco -டெக்ஸாகோ, Lanka Lubricants – லங்கா லுப்ரிகன்ட்ஸ்)

செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் லங்கா PLC

தொ.பே: 011-2370470 (toll free)
மின்னஞ்சல்:contactus@chevron.com


(Greatwall – க்ரேட்வோல்)

இன்டர்ஓஸென் லுப்ரிகன்ட்ஸ் லிமிற்றட்

தொ.பே: 011-4799100
lubes@interocean.lk

(Servo – செவ்ரொ)

லங்கா IOC PLC

தொ.பே: 011-2475420
மின்னஞ்சல்: lankaioc@lankaioc.com


(Laugfs Oil – லாப்fஸ் ஒயில்)

லாப்fஸ் லுப்ரிகன்ட்ஸ் லிமிற்றட்

தொ.பே: 011-5661421, 077-3022075
மின்னஞ்சல்: nalakam@laugfs.lk
(ExxonMobil – எக்ஸொன்மொபில், Esso – எஸ்ஸொ, Mobil – மொபில்)

மெக்லெரன்ஸ் லுப்ரிகன்ட்ஸ் லிமிற்றட்

தொ.பே: 011-4799155
மின்னஞ்சல்: secretariat@mclarenslubes.lk


(Shell – செல்)

என்.எம். டிஸ்ட்ரிபியுட்டர்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்

தொ.பே: 011-5740681, 077-7270993
மின்னஞ்சல்: nmdist@sltnet.lk


(Elf – எல்ப்f, Total – டோட்டெல்)

நவலோக்க ABC பெற்றோலியம் (ப்ரைவட்) லிமிற்றட்

தொ.பே: 011-2937937/38, 077-2442578
மின்னஞ்சல்: sabtotal@ashfordint.net


(Toyota – டொயோட்டா)

டொயோட்ட லாங்கா (ப்ரைவட்) லிமிற்றட்

தொ.பே: 011-2939000, 011-2941561
மின்னஞ்சல்: tgmo_info@toyota.lk


(MAK – எம்ஏகே)

TVS ஒட்டோமோட்டிவ்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்

தொ.பே: 011-4797200
மின்னஞ்சல்:info@tvsauto.lk


(Valvoline – வல்வோலைன்)

யுனைற்றெட் மோட்டர்ஸ் லிமிற்றட்

தொ.பே: 011-4797278, 011-4797200,077-7874569
மின்னஞ்சல்: priyanthae@unitedmotors.lk