பெற்றோலியம்

பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய், விமான எரிபொருள், கப்பல் எரிபொருள், உலையெண்ணெய், திரவநிலைப் பெற்றோலிய எரிவாயு என்பன பெற்றோலிய உற்பத்தியில் அடங்குகின்றன. இயற்கை, திரவ, வாயு, திண்ம, அரைத் திண்ம ஆகிய நிலைகளில் இருந்தாலென்ன அத்தகைய மசகெண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் ஹைட்ரோகாபன் என்பன பெற்றோலிய வளங்களில் அடங்குகின்றன.
உத்தேச ஒழுங்குறுத்துகைப் பங்களிப்புப்பணி விடயத்தைத் தொகுத்துத் தயாரித்த நேரத்தில், ஆணைக்குழு கொள்கை மற்றும் ஒழுங்குறுத்துகை விடயங்கள் தொடர்பில் பெற்றோலிய மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சுக்கும் சம்பந்தப்பட்ட அரசாங்க முகவராண்மைகளுக்கும் ஆலோசனையையும் உதவிகளையும் வழங்கி வந்தது.
பெற்றோலிய அகழ்வுக் கைத்தொழிலில் பின்வரும் செயற்பாடுகள் உள்ளடங்குகின்றன:

  • பெற்றோலிய வளங்களின் அல்லது பெற்றோலிய உற்பத்திகளின் இறக்குமதியும் ஏற்றுமதியும்
  • பெற்றோலிய வளங்களின் சுத்திகரிப்பு, கலத்தல் அல்லது பெற்றோலியப் பொருட்களின் உற்பத்தி
  • பெற்றோலிய வளங்களின் அல்லது பெற்றோலிய உற்பத்திகளின் களஞ்சியம், பகிர்ந்தளிப்பு, ஏற்றியிறக்கல்
  • பெற்றோலிய உற்பத்திகளின் சில்லறை விற்பனையும் மொத்த விற்பனையும்

அண்மை ஆண்டுகளின் போது, பெற்றோலிய அகழ்வுக் கைத்தொழிலை ஒழுங்குறுத்தும் வகையில் ஆணைக்குழுவுக்கு அதிகாரத்தத்துவமளிப்பதற்குத் தேவையான சட்டவாக்கத்தை வரைவது தொடர்பில் பெற்றோலிய மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சுக்கு (பெ.பெ.வ.அ.அ) ஆணைக்குழு உதவியது. அத்தகைய சட்டவாக்கம் சட்டமாக வருவதற்கு முன்னர், இ.பொ.ப.ஆ குழு கொள்கை மற்றும் ஒழுங்குறுத்துகை விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குதல், உதவுதல் ஆகிய வழிகளில் பெற்றோலியக் கைத்தொழிலில் உராய்வுநீக்கி எண்ணெய்க்கான மறைமுக ஒழுங்குறுத்துநராகத் தொழிற்பட்டது. நெருங்கிய எதிர்காலத்தில் பெற்றோலியக் கைத்தொழிலை முழுமையாக ஒழுங்குறுத்துவதற்கான அதிகாரத்தத்துவம் தனக்கு உரித்தளிக்கப்படும் என ஆணைக்குழு நம்பிக்கை கொண்டுள்ளது.

பெற்றோலியக் கைத்தொழிலின் ஒழுங்குறுத்துகைக்கான பெற்றோலியம் சார்ந்த சட்டத்தின் சட்டவாக்க முன்னேற்றம்

பெற்றோலியக் கைத்தொழிலை ஒழுங்குறுத்தும் வகையில் ஆணைக்குழுவுக்கு அதிகாரத்தத்துவமளிக்கக்கூடிய பெற்றோலிய உற்பத்திகள் (விஷேட ஏற்பாடுகள்) (திருத்தல்) சட்டம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபன (திருத்தல்) சட்டம் ஆகிய சட்டங்களை வரைந்து நிறைவு செய்வதை நோக்கி சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைஞர் திணைக்களம் ஆகியவற்றுடனான ஆலோசனையில் இந்த ஆணைக்குழு பெற்றோலியக் கைத்தொழில் அமைச்சுக்கு தொடர்ந்தும் ஆலோகனைகளையும் உதவிகளையும் வழங்கிப் பங்களிப்புச்செய்தது.

பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சு மற்றும் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (இ.பொ.ப.ஆ) ஆகியவற்றுடனான ஆலோசனையில் இந்த இரண்டு சட்டங்களும் சட்ட வரைஞர் திணைக்களத்தினால் மீளவரையப் பட்டுள்ளன. இதனை அமைச்சரவைக்குச் சமர்ப்பிப்பதற்கு முன்னர் இதற்கான அங்கீகாரம் சட்டமா அதிபரிடமிருந்து பெறப்படவுள்ளது. அந்த அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதன் பின்னர் இந்தச் சட்டங்கள் பாராளுமன்றத்திற்கு அதன் அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிக்கப்படும்.

ஏற்கனவேயிருக்கின்ற சட்டங்கள்