பிணக்குகள் தீர்த்தல் முறைமைக்கான பிரவேசம்

அனுமதிப்பத்திரம் வழங்கல்

அனுமதிப்பத்திரம் வழங்கல் – மின்சாரம் சார்ந்த கைத்தொழில்

ஒரு அனுமதிப்பத்திரத்தை வழங்குவதனூடான ஒரு முறைமை மின்சாரம் சார்ந்த கைத்தொழிலின் ஆரம்ப ஒழுங்குறுத்துகை முறையாகும். அனுமதிப்பத்திரங்கள் மின்சாரம் சார்ந்த கைத்தொழிலிலுள்ள செயற்பாடுகளின் வகை, அந்த அனுமதிப் பத்திரங்களில் அடங்கியிருக்கின்ற விடயங்கள் மற்றும் அந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் அந்த அனுமதிப்பத்திரங்களைக் கொண்டு என்ன விடயங்களை மேற்கொள்ளலாம் என்பன தொடர்பான அம்சங்களை இந்தப் பிரிவு குறிப்பீடுசெய்கின்றது.

2009 இன் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் (SLEA) கீழ் அனுமதிப்பத்திரத்தை வழங்குதல்

குறிப்பாக, SLEA-(ஆங்கில மொழியில்) இன் கீழ், ஒரு மின்சார அனுமதிப்பத்திரத்தின் மூலம் அதிகாரமளிக்கப்படாத அல்லது ஒரு மின்சார அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்கான தேவைப்பாட்டிலிருந்து விலக்களிக்கப்படாத வரையில் நீங்கள் மின்சாரத்தை உற்பத்திசெய்வது, மின்சாரத்தைச் செலுத்துவது, மின்சாரத்தைப் பகிர்ந்தளிப்பது அல்லது மின்சாரத்தை விநியோகிப்பது ஒரு குற்றமாகக் கருதப்படும். ஒரு தனியாளுக்கு அல்லது ஒரு வகுதி நபர்களுக்கு இந்த விலக்களிப்புகள் ஏற்புடையதாக இருக்கலாம்.
இந்த மின்சார அனுமதிப்பத்திரங்கள் மின்சாரத்தை உற்பத்திசெய்தல், மின்சாரத்தைச் செலுத்துதல், மின்சாரத்தைப் பகிர்ந்தளித்தல் அல்லது விநியோகித்தல் ஆகிய விடயங்களை மேற்கொள்ளுகின்ற நபர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நிமித்தம் அதிகளவில் பிரயோகிக்கப்படும் பிரதான கருவியாக விளங்குவதால், ஒரு ஒழுங்குவிதிகளின் தொகுப்பினூடாக பிரசுரிக்கப்படத் தேவையான விரிவான நியதிகள், நடபடிமுறைகள் மற்றும் நடைமுறைகள் முதலிய விடயங்களை இது கருதுகின்து. ஆகையால், எமது இணையத்தளத்தில் கிடைக்கக்கூடிய அனுமதிப்பத்திரம் வழங்கல் தொடர்பான விண்ணப்ப ஒழுங்குவிதிகள், ஒரு மின்சார அனுமதிப்பத்திரத்திற்கான அல்லது ஒரு விலக்களிப்புக்கான ஒரு விண்ணப்பத்தை நீங்கள் சமர்ப்பிப்பதற்கு முன்னர் அந்த ஒழுங்குவிதிகள் நிதமும் குறிப்பீடுசெய்யப்படுதல் வேண்டும். ஒரு மின்சார அனுமதிப்பத்திரமின்றி அல்லது அதற்கான ஒரு விலக்களிப்பின்றி அனுமதிக்கத்தக்க ஒரு செயற்பாட்டை மேற்கொள்ளுவது ஒரு குற்றமென்ற உண்மையான கண்ணோட்டத்தில், நீங்கள் அனுமதிப்பத்திரம் வழங்கல் தொடர்பான விண்ணப்ப ஒழுங்குவிதிகள் பற்றியும் SLEA சட்டம் பற்றியும் தேடியறிந்துகொள்ளுவது மிக அவசியமாகும்.

அனுமதிப்பத்திர நிபந்தனைகள்

மின்சார அனுமதிப்பத்திர மாதிரிகளும் (அதாவது உரிய அனுமதிப்பத்திரங்களில் பிரயோகிக்கப்படும் வித்தியாசமான நிபந்தனைகளைக் குறிப்பீடுசெய்கின்ற (மின்சார உற்பத்தி, மின்சார செலுத்துகை, மின்சாரப் பகிர்ந்தளிப்பு மற்றும் மின்சார விநியோகம் ஆகியன தொடர்பான) அனுமதிப்பத்திரம் வழங்கல் தொடர்பான விண்ணப்ப ஒழுங்குவிதிகளில்-(ஆங்கில மொழியில்) உள்ளடங்கியிருக்கும். இந்த மாதிரி அனுமதிப்பத்திரங்கள் எமது இணையத்தளத்தில் கிடைக்கக்கூடியதாகவுள்ளன. SLEA சட்டத்தின் கீழ், பொதுவான மற்றும் விஷேட அனுமதிப்பத்திர நிபந்தனைகளும் இந்த அனுமதிப்பத்திரங்களில் உள்ளடங்கி இருக்கும்.

பொதுவான நிபந்தனைகள்

இந்த நிபந்தனைகள் சகல வகையான அனுமதிப்பத்திரங்களிலும் உள்ளடங்கியிருக்கும். உதாரணமாக: அனுமதிப் பத்திரத்தை வழங்குவது தொடர்பில் எமக்கு செலுத்துவதற்கு அனுமதிப்பத்திரம் பெற்ற தரப்பைத் தேவைப்படுத்துகின்ற, போட்டித்தன்மை வாய்ந்த நடத்தைக்கு எதிரான செயலில் ஈடுபடுவதிலிருந்து அனுமதிப்பத்திரம் பெற்ற தரப்பைத் தடுக்குகின்ற நிபந்தனைகள், மற்றும் அனுமதிப்பத்திரம் பெற்ற தரப்பை இயைந்தொழுக நிர்ப்பந்திக்கின்ற எமது தீர்மானங்கள், கட்டளைகள், பணிப்புரைகள் மற்றும் நிர்ணயங்கள் என்பன ஒரு மின்சார உற்பத்தி, செலுத்துகை அல்லது மின்சாரப் பகிர்ந்தளிப்பு அனுமதிப்பத்திரத்தில் உள்ளடங்கியிருக்கலாம்.

விஷேட நிபந்தனைகள்

இந்த நிபந்தனைகள் மின்சார அனுமதிப்பத்திர வகுதிகளின் குறிப்பிட்ட வகுதிகளுக்கான விஷேட நிபந்தனைகளாகும். வித்தியாசமான வகுதி அனுமதிப்பத்திரங்களில் உள்ளடங்கயிருக்கின்ற விஷேட நிபந்தனைகளுக்கான சில உதாரணங்கள் பின்வருமாறு:

  • மின்சார உற்பத்தித் தரப்பு தான் உற்பத்திசெய்கின்ற மின்சாரத்தை ஒரு மின்சார செலுத்துகை அனுமதிப் பத்திரத்தை வைத்திருக்கின்ற ஒரு தரப்புக்கு விற்பனை செய்வதற்குத் தேவைப்படுத்துகின்ற ஒரு நிபந்தனையை உள்ளடக்குகின்ற மின்சார உற்பத்தி அனுமதிப்பத்திரங்கள்.
  • மின்சார செலுத்துகை முறைமையின் அபிவிருத்திற்கான மின்னுற்பத்திப் பொறித்தொகுதிக்குரிய எதிர்கால மின்சாரத் தேவையை எதிர்வுகூறுவதற்கும் மற்றும் நியாயமான விதத்தில் எதிர்வுகூறக்கூடிய மின்சாரத்திற்கான கேள்வியைப் பூர்த்திசெய்வதற்கான புதிய மின்னுற்பத்திப் பொறித்தொகுதி அபிவிருத்திற்கு வசதியளிப்பதற்கும், அனுமதிப்பத்திரத்தை வைத்திருக்கின்ற தரப்பைத் தேவைப்படுத்துகின்ற ஒரு நிபந்தனையை உள்ளடக்குகின்ற மின்சார செலுத்துகை அனுமதிப்பத்திரம்.
  • மின்சார நுகர்வோரின் பாதுகாப்பின் நிமித்தம் அத்தியாவசியம் என நாம் கருகின்ற ஏற்பாடுகளை உள்ளிட்ட நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான செயன்முறை விதிக்கோவையைப் பிரசுரிப்பதற்கு அனுமதிப்பத்திரம் பெற்ற தரப்பைத் தேவைப்படுத்துகின்ற ஒரு நிபந்தனையை உள்ளடக்குகின்ற மின்சாரப் பகிர்ந்தளிப்பு அனுமதிப் பத்திரங்கள்.
    மேலே சுட்டிக்காட்டப்பட்டவாறு, அனுமதிப்பத்திரங்களில் உள்ளடக்குவதற்கு எதிர்பார்க்கப்படக் கூடிய பொதுவான மற்றும் விஷேட நிபந்தனைகளின் பரந்தவொரு விபரப்பட்டியலுக்கு நீங்கள் கட்டாயமாக SLEA சட்டத்தைப் பார்க்க வேண்டும். அனுமதிப்பத்திரங்களை வழங்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கின்ற போது, சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து, மேலதிக நிபந்தனைகளை உள்ளடக்குவதற்கும் நாங்கள் உத்தேசிக்கலாம் என்பதை நீங்கள் நன்கறிந்தவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பம், ஒரு நீடிப்பை வழங்குதல்

ஒரு அனுமதிப்பத்திரம் தேவைப்படுவதற்கான ஒரு செயற்பாட்டை நீங்கள் மேற்கொள்ளுவதற்கு எண்ணினால், அல்லது ஒரு தனியாள் விலக்களிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அல்லது உங்களது தற்போதைய அனுமதிப்பத்திரத்திற்கான ஒரு நீடிப்பைப் பெறுவதற்குத் தேவையானால், எமக்கு நீங்கள் ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அனுமதிப்பத்திரம் வழங்கல் தொடர்பான விண்ணப்ப ஒழுங்குவிதிகள் இந்த இரண்டு விடயங்களையும் பெருமளவில் விபரமாக கையாளும். ஆகையால் ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு முன்னர் நீங்கள் எப்பொழுதும் அந்த ஒழுங்குவிதிகளை வாசித்தறிய வேண்டும்.

திருத்தம்

நீங்கள் ஒரு மின்சார அனுமதிப்பத்திரத்தை வைத்திருந்தால், அந்த அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தின் போது, அந்த அனுமதிப்பத்திரம் திருத்தப்படுதல் வேண்டுமென விரும்பி அதற்காக நீங்கள் விண்ணப்பிக்கலாம். மாறாக நாமும் பல காரணங்களின் நிமித்தம் அந்த அனுமதிப்பத்திரத்தைத் திருத்தலாம்.

அனுமதிப்பத்திரம் பெற்ற தரப்பு உத்தேச திருத்தத்திற்கு உடன்படுமிடத்து நாம் அந்த அனுமதிப்பத்திரங்களைத் திருத்தலாம். அனுமதிப்பத்திரம் பெற்ற தரப்புகள் அந்த அனுமதிப்பத்திரத்தின் திருத்தத்திற்கு உடன்படாதவிடத்து, பொதுமக்களின் நலன் கருதி அந்த அனுமதிப்பத்திரங்கள் திருப்பட வேண்டுமா மற்றும் எத்தகைய திருத்தங்கள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும் என்பதைத் தீர்மாப்பதற்கு SLEA சட்டம் மின்வலு சக்தி விடயப் பொறுப்பு அமைச்சருக்கு சட்ட ஏற்பாடுகளை உரித்தளிக்கின்றது. பொதுமக்களின் நலன் எவ்வாறு சிறந்த முறையில் கவனிக்கப்படும் என்பது பற்றிய எமது கருத்துக்களை உள்ளடக்கி இந்த அமைச்சருக்கு எம்மால் விடுக்கப்படும் ஒரு குறிப்பைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

மின்சாரப் பகிர்ந்தளிப்பு அனுமதிப்பத்திரம் பெற்ற தரப்புகளுக்கான விலக்களிப்புகள்

மின்சாரப் பகிர்ந்தளிப்பு அனுமதிப்பத்திரம் பெற்ற தரப்புகளிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்து குத்தகைத் தரப்புகளுக்கு (கூட்டுஆதன வீடமைப்புத் திட்டங்கள், வதிவிடக் கட்டிடங்கள், கடைக் கட்டிடத்தொகுதிகள் முதலியன) அந்த மின்சாரத்தைப் பகிர்ந்தளிக்கின்ற சிறு மின்சாரப் பகிர்ந்தளிப்புத் தரப்புகள் வரித்தீர்வை பற்றித் தீர்மானிப்பதற்கான வினைத்திறன் வாய்ந்த ஒரு முறையியலைக் கொண்டிருக்கவில்லை. ஆகையால் 2009 இன் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டம் சட்டவாக்கம் பெறுவதற்கு முன்னர் சிறு மின்சாரப் பகிந்தளிப்புத் தரப்புகளினது மின்சாரக் கணிப்பீட்டு முறைகள் மின்சார நுகர்வோருக்கும் அந்த மின்சாரப் பகிர்ந்தளிப்புத் தரப்புகளுக்கும் இடையில் பிணக்குகளை ஏற்படுத்தி இருந்தன.

2009 இன் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் சட்டவாக்கத்தைத் தொடர்ந்து, இந்தப் பிரச்சினைக்குப் பொருத்தமான சட்டப் பின்னணி அறிமுகப்படுத்தப்பட்டது. குறித்த சட்டத்தின் 7 ஆம் பிரிவின் பிரகாரம், தற்பொழுது மின்சாரப் பகிர்ந்தளிப்பு அல்லது மின்சார விநியோக நடவடிக்கையில் ஈடுபடும் தரப்புகள் அத்தகைய நடவடிக்கைகளைத் தொடர்வதற்கான ஒரு அனுமதிப்பத்திரத்தை அல்லது ஒரு விலக்களிப்பைப் பெறுவதற்குத் தேவைப்படுத்தப்படுகின்றன.

ஒரு விலக்களிப்புக்கு விண்ணப்பிப்பது எவ்வாறு?

சிறு மின்சாரப் பகிர்ந்தளிப்புத் தரப்புகள் இ.பொ.ப.ஆ இணையத்தளத்திலிருந்து எளிதில் விண்ணப்பப் படிவத்தைக் கீழிற்றக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பிக்கும் தரப்பு சரியான முறையில் தயாரித்துப் பூரணப்படுத்திய தனது விண்ணப்பத்தை தேவையான ஆவணங்கள், தகவல்கள் மற்றும் 1000.00 ரூபாய் கட்டணம் என்பவற்றுடன் இந்த ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் பின்னர், ஆணைக்குழு ஒரு வர்த்தமானி அறிவித்தல், செய்திப்பத்திரிகைகளில் ஒரு பொது அறிவித்தல், மின்வலு சக்தி அமைச்சர் அடங்கலாக ஏனயை உரிய தரப்புகளுக்கான அறிவித்தல்கள் என்பவற்றைத் தொடர்ந்து, விண்ணப்பித்த அந்தத் தரப்புக்கு விலக்களிப்பை வழங்கும்.

விலக்களிப்பு வழங்கப்பட்டதன் பின்னர், மின்சாரப் பகிர்ந்தளிப்புத் தரப்பு வரித்தீர்வை வீதம் தொடர்பான ஒரு பிரேரணையைத் தயாரித்து ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைக் கோரி அந்தப் பிரேணையை ஆணைக்குழுவுக்கு முன்வைக்க வேண்டும். மின்சாரப் பகிர்ந்தளிப்புத் தரப்பு வரித்தீர்வை வீதத்தைத் தீர்மானிக்கும் பொருட்டு பின்பற்ற வேண்டிய பொதுவான வழிகாட்டல்கள் இ.பொ.ப.ஆ இணையத்தளத்தில் கிடைக்கக்கூடியதாகவுள்ளன. மின்சாரப் பகிர்ந்தளிப்புத் தரப்பு தனது பிரேரணையை ஆதாரப்படுத்துவதற்குத் தேவையான சம்பந்தப்பட்ட சகல ஆவணங்களையும் சமர்ப்பித்தல் வேண்டும்.

அனுமதிப்பத்திரம் பெற்ற தரப்புத் தகவல் சமர்ப்பண முறைமை

மின்சாரம் சார்ந்த கைத்தொழிலை ஒழுங்குறுத்தும் நிமித்தம், இந்த ஆணைக்குழு அனுமதிப்பத்திரம் பெற்ற தரப்பிடமிருந்து வழமையான ஒரு அடிப்படையில் அந்தத் தரப்பகளிது இயக்கச்செயற்பாடுகள் தொடர்பான நியமமான தகவல்களைத் தேவைப்படுத்தும். ஆகையால், அதற்கான ஒரு முறைமை தயாரிக்கப்பட்டு தற்பொழுது நியமமான படிவங்களில் இணையத்தள மைய முறைமையினூடாக தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தரவுகள் உறுதிசெய்யப்பட்டு பல வழமையான அறிக்கைகள் ஒழுங்குறுத்துகை நோக்கத்திற்காக முன்வைக்கப்படுகின்றன.

அனுமதிப்பத்திர வகைகள்