பிணக்குகள் தீர்த்தல் முறைமைக்கான பிரவேசம்

வரித்தீர்வையில் திணித்தல்

2015 ஆம் ஆண்டளவில் மரபு-ரீதியற்ற மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களிலிருந்து10% மின்சாரத்தை உற்பத்திசெய்யும் திட்டத்தை அரசாங்கம் ஒரு கொள்கை இலக்காகத் தாபித்துள்ளது. பெருமளவான மின்னுற்பத்திப் பொறித்தொகுதிகள் தனியார் துறையினால் நிருவகிக்கப்படுவதானது இந்த NCRE சக்தி உற்பத்தியில் காணப்படுகின்ற பிரத்தியேக சிறப்பு அம்சங்களிலொன்றாகும். அத்தகைய முதலீடுகளைத் தக்கவைத்துக்கொள்ளுவதற்கும், அந்த முதலீடுகளை அதிகளவில் குறித்த துறையில் ஈர்த்துக்கொள்ளுவதற்கும் நியாயமான ஒரு இலாபத்தை இந்த NCRE வரித்தீர்வைகளினூடாகக் கிடைககச்செய்தல் வேண்டும். எனினும், இறுதியாக மின்சாரத்தின் கொள்வனவு விலையைச் செலுத்துவது மின்சார நுகர்வோர் என்பதை இங்கு கவனிக்க வேண்டும். மின்சார நுகர்வோரின் நலனைப் பாதுகாப்பது இ.பொ.ப.ஆ குழுவின் பொறுப்பும் கடமையும் ஆகும். ஆகையால் வரித்தீர்வைகளில் திணித்தல் விடயத்தை ஆணைக்குழு பொதுமக்களிடம் ஆலோசனைகளைக் கேட்டறியும் நடவடிக்கையினூடாகத் தீர்மானிக்கின்றது.