பிணக்குகள் தீர்த்தல் முறைமைக்கான பிரவேசம்

பிணக்குகள் தீர்த்தல்

பிணக்குகள் தீர்த்தல் நடைமுறை பற்றிய நியதிகள்

உங்களது சேவை வழங்கும் தரப்புடன் உங்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது என நாங்கள் உணர்ந்தால், சகல தரப்புகளிடமிருந்தும் கிடைக்கின்ற உடன்பாட்டின் பேரில், 2011 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதிய 1707/15 ஆம் இலக்க ‘பிணக்குகள் தீர்த்தல் நடைமுறை பற்றிய நியதிகள்’ தொடர்பான அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலின் (பின்னிணைப்பு 003) இன் பிரகாரம் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் நடுத்தீர்ப்புக் குழுவுக்கு உங்களது பிணக்குகளைக் குறிப்பீடுசெய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ளுவோம்.

‘பிணக்குத் தீர்த்தல் நடைமுறை பற்றிய நியதிகள்’ யாவை?

பிணக்குகள் தீர்த்தல் நடைமுறை பற்றிய நியதிகள் என்பது எழுத்திலான வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட நியதிகளின் ஒரு தொகுப்பாகும். இந்தத் தொகுப்பு மின்சார விநியோகம் தொடர்பான உங்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஆணைக்குழுவினால் பின்பற்ற வேண்டிய நடைமுறை பற்றி விபரிக்கும்.
இந்த நடைமுறையை பின்வருமாறு தெளிவுபடுத்தலாம்:

  • ஆணைக்குழு உங்களது பிணக்குகளைத் தீர்ப்பதற்குத் தீர்மானிக்கும் பட்சத்தில், பிணக்குகளுக்கான சகல தரப்புகளிடமிருந்தும் கிடைத்த உடன்பாட்டின் பேரில், ஒரு நடுத்தீர்ப்பாளர்கள் குழு நியமிக்கப்படும்.
  • இந்தக் குழு விசாரணைகளை நடாத்தும் நிமித்தம், பிணக்குடன் சம்பந்தப்பட்ட சகல தரப்புகளையும், ஒரு நடுத்தீர்ப்புப் பேச்சுவார்த்தைக்காக அழைக்கும். அதே நேரம் இந்தக் குழு தகவல்களை அல்லது ஆவணங்களை அழைக்கும்.
  • பின்னர், இந்தக் குழு அந்தப் பிணக்கை மீளாய்வுசெய்து ஒரு தீர்மானத்தை எட்டும்.
  • குழுவின் அந்தத் தீர்மாணம் ஆவணப்படுத்தப்பட்டு அந்த ஆவணத்தின் மீது ஆணைக்குழுவின் அலுவலக முத்திரையிடப்பட்டு பொறியிடப்படும்.
  • உங்களது பிணக்கு தொடர்பில் குழுவின் தீர்மானத்தை வெளியிடுவதற்கு முன்னர், அந்தக் குழு பிணக்குடன் சம்பந்தப்பட்ட தரப்புகளை சிநேகிதபூர்வமான ஒரு தீர்வை எட்டச்செய்வதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொள்ளும்.
  • பிணக்குக்கான தரப்புகள் ஒரு தீர்வுக்கு உடன்படும் பட்சத்தில், அந்தத் தீர்வு ஆவணப்படுத்தப்பட்டு அந்த ஆவணத்தில் அந்தக் குழுவின் உறுப்பினர்களாலும் பிணக்குக்கான சகல தரப்புகளாலும் கையொப்பமிடப் படும்.
  • பிணக்குக்கான தரப்புகள் ஒரு தீர்வுக்கு உடன்படாத பட்சத்தில், இந்தக் குழு, பிணக்குடன் சம்பந்தப்பட்ட சகல தரப்புகளினதும் முன்னிலையில், அந்தப் பொறியிடப்பட்ட தீர்மான ஆவணத்தைத் திறந்து, ஆணைக் குழுவினால் எட்டப்பட்ட தீர்வாக அதனை அந்தத் தரப்புகளிடம் சமர்ப்பிக்கும்.
  • இந்தக் குழுவினால் வழங்கப்பட்ட தீர்வை, பிணக்குடன் சம்பந்தப்பட்ட தரப்புகள் ஏற்க விரும்பவில்லை எனில், 2009 இன் 20 ஆம் இலங்கை மின்சாரச் சட்டத்தின் 39 ஆம் பிரிவின் (2) ஆம் உப பிரிவின் பிரகாரம், குறித்த பிணக்கு பொருத்தமான ஒரு நீதிமன்றத்தினால் அல்லது ஒரு நடுத்தீர்ப்பு நியாயாதிக்க சபையினால் நிர்ணயிக்கப்பட வேண்டுமா என்பது பற்றித் தீர்மானிப்பதற்கு ஆணைக்குழுவுக்கு அதிகாரமுண்டு.
  • இந்த நியதிகளின் கீழ் நடுத்தீர்ப்பு நடபடிமுறையினூடாக குறித்த பிணக்கு தீர்க்கப்படும் போது, இது தொடர்பில் ஏற்பட்ட ஆணைக்குழுவின் செலவுகள் ஆணைக்குழுவினால் நிர்ணயிக்கப்படும். ஆணைக்குழு நிர்ணயித்த இந்தச் செலவுத் தொகை பிணக்குடன் சம்பந்தப்பட்ட தரப்புகளினால் சம விகிதத்தில் செலுத்தப் படுதல் வேண்டும்.