நுகர்வோர் உரிமைகள்

ஒரு மின்சார நுகர்பவரின் உரிமைகளும் கடமைகளும்

2009 இன் இலங்கை மின்சாரச் சட்டத்தினது 3 (1) (உ) பிரிவு, நுகர்வோரின் உரிமைகளையும் கடமைகளையும் சுருக்கமாக விபரிக்கின்ற ஒரு கூற்றைப் பிரசுரிக்குமாறு இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவைத் (ஆணைக்குழு) தேவைப்படுத்துகின்றது.
நுகர்வோரின் பாதுகாப்புக்கும், மின்சார அனுமதிப்பத்திரம் பெற்ற தரப்பு வழங்க வேண்டுமென எதிர்பார்க்கப் படுகின்ற சேவையின் தர அளவை அந்த நுகர்வோர் அறிந்துகொள்ளுவதற்கும் இன்றியமையாதாக விளங்குகின்ற உரிமைகள் பற்றி மின்சார நுகர்வோருக்கு மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அதே நேரம் ஒரு வினைத் திறன் வாய்ந்த மின்சாரம் சார்ந்த சேவையை வழங்குவதற்கான அத்தியாவசியத் தேவைப்பாடாக விளங்குகின்ற நுகர்வோரின் கடமைகள் மற்றும் தேவைகள் பற்றி நுகர்வோருக்குப் போதிப்பதும் மேற்குறித்த கூற்றைப் பிரசுரிப்பதன் பிரதான குறிக்கோள்களாகும். பின்வரும் உரிமைகளும் கடமைகளும் உரிமைகளும் கடமைகளும் -(ஆங்கில மொழியில்) என்ற கூற்றில் தெளிவாக விபரிக்கப்பட்டுள்ளன.

நுகர்வோர் உரிமைகள்:

 • அனுமதிப்பத்திரம் பெற்ற தான் வழங்குவதற்கு உடன்பட்டுள்ள தர நியமங்களை ஈடுசெய்வதற்கான பாதுகாப்பான மின்சாரமும் நம்பத்தகு பிரவேசமும்
 • மின்சார விநியோகம் சார்ந்த சேவை சம்பந்தப்பட்ட விடயங்கள் பற்றிய தகவல்களுக்கான பிரவேசம்
 • புதிய மின்சார சார் இணைப்புகள், கொள்திறன் சேவை சார்/வரித்தீர்வை வகுதி மாற்றம்
 • மின்சாரத் துண்டிப்புகளும் ஒப்பந்த முடிவுறுத்தலும்
 • மீள்மின்சார இணைப்புகள்
 • முறைப்பாடுகளைக் கையாளுதல்
 • மானிவாசிப்புக் கருவிகள், மானிவாசிப்பு மற்றும் மின்சாரக் கட்டண நடைமுறைகள்
 • மின்சாரக் கட்டணங்கள்
 • மின்சாரம் சார்ந்த சேவைக் கட்டணங்கள், விலைக் கட்டமைப்பு, மற்றும் மின்சாரக் கட்டணம் சார்ந்த கொடுப்பனவுகள்
 • மின்சார நுகர்வோரின் வளாகங்களுக்குள் பிரவேசித்தல்
 • நுகர்வோர் கல்வி
 • சமமான கவனிப்பு
 • பிரத்தியேகமும் இரஷியத்தன்மையும்

நுகர்வோர் கடமைகள்:

 • சட்டப்படியான மின்சாரக் கட்டணம் சார்ந்த கொடுப்பனவுகள்
 • அனுமதிப்பத்திரம் பெற்ற தரப்புகளுடனும் அவற்றின் அதிகாரம் அளிக்கப்பட்ட அலுவலர்களுடனும் ஒத்துழைப்பான முறையில் நடந்துகொள்ளுதல்
 • அனுமதிப்பத்திரம் பெற்ற தரப்புகளுடன் செய்துகொள்ளப்பட்ட வரித்தீர்வை ஒப்பந்தங்களின் நியதிகள் மற்றும் நிபந்தனைகள் என்பவற்றுக்கு இயைந்தொழுகுதல்
 • வளாகங்களில் நிறுவப்பட்டுள்ள மின்சார மார்க்கங்களின் பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ளுதல்
 • புதிய ஒரு மின்சார இணைப்பின் நிமித்தம் விண்ணப்பிக்கும் போது அனுமதிப்பத்திரம் பெற்ற தரப்புக்கு சகல பொருத்தமான தகவல்களையும் வெளிப்படுத்துதல்