நுகர்வோர் சங்கங்கள்

நுகர்வோர் வலையமைப்பு

இந்த நுகர்வோர் வலையமைப்பு, நுகர்வோர் ஒருவருக்கொருவரும் அதே நேரம் நுகர்வோர் ஆலோசனைக் குழுவுடனும் (நு.ஆ.கு) தமது கருத்துக்களையும் பிரச்சினைகளையும் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரு கூட்டத்திற்கான வசதிகளை ஏற்பாடுசெய்து வழங்கும். இதனால் நுகர்வோர் ஒழுங்குறுத்துகை மற்றும் கொள்கை ஆகிய விடயங்களில் பங்கேற்கலாம். இந்த வலையமைப்பு நுகர்வோருடன் ஆலோசனைகளை நடாத்துவதற்கும் அவர்களுடன் மதிப்பாய்வுகளை மேற்கொள்ளுவதற்குமான ஒரு வழிமுறையையும் முன்வைக்கும்.

இ.பொ.ப.ஆ ஒழுங்குறுத்தும் பொதுப் பயன்பாடுகள் சார்ந்த கைத்தொழில்களிலுள்ள தனியாள் நுகர்வோருக்கும் நுகர்வோர் சங்கங்களுக்கும் இந்த வலையமைப்பில் பங்கேற்குமாறு நு.ஆ.கு அழைப்பு விடுக்கும். இந்த நு.ஆ.கு பொருத்தம் என நினைக்கும் நுகர்வோர் அமைப்புகளுக்கும் இதில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கலாம். நுகர்வோர் வலைமைப்புடன் எழுத்துமூலம் தொடர்புகொள்ளலாம்.

சகல உறுப்பினர்களையும் அழைத்து நுகர்வோர் வலையமைப்பின் ஒரு வருடாந்தக் கூட்டத்தை இந்த நு.ஆ.கு நடாத்தும். அதே நேரம் இது ஆலோசனை சார்ந்த செயன்முறையின் பாகமாக ஏனைய வேலையரங்குகளையும் ஒழுங்குசெய்யலாம். பிரச்சினையிலிருக்கின்ற விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை அழைக்கும் நிமித்தமும் இந்த நு.ஆ.கு மின்னஞ்சல் மூலம் அல்லது எழுத்துமூலம் நேரடியாக வலையமைப்பு உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளலாம் அல்லது வலையமைப்பு உறுப்பினர்கள் மூல கருத்துரைகளுக்காக இணையத்தளத்தில் அஞ்சல் செய்யலாம்.

நு.ஆ.கு, குறிப்பாக மிகவும் பின்தங்கிய பகுதிகளிலுள்ள நுகர்வோருக்கு தனது பணியில் பங்கேற்பதற்கு முழுமையான வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்துகொள்ளுவதில் அக்கறையாக இருக்கின்றது. ஆகையால், இந்த வலையமைப்பு அதன் உறுப்பினர்களுக்கும் நு.ஆ குழுவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை மேம்படுத்துவதற்கான தகவல் தொழில்நுட்பத்தின் முழுமையான பாவனைக்கு பயனுள்ளதாக அமையும்.

இது தொடர்பில், ஆணைக்குழு பிராந்திய நுகர்வோர் சங்கங்களைத் தாபிப்பதை முன்னெடுத்துள்ளதுடன், இந்த அறிவித்தல் விடுக்கப்படும் திகதியில் அது நாடளாவிய ரீதியில் நுகர்வோர் சங்கங்களைத் தாபித்துமுள்ளது.

பிராந்திய நுகர்வோர் சங்கள் பற்றிய விபரங்கள்

இல.

மாகாணம்

மாவட்டம்

பி.செ பிரிவு

கி.உ பிரிவு / கிராமம்

சங்கத்தின் பெயர்

1 தென் மாகாணம் காலி போப்பே – பொட்டல 114 D – அம்பகஹவத்த அம்பகஹவத்தப் பிராந்திய நுகர்வோர் சங்கம்
காலி யக்கலமுல்ல 182 D – மாகெதர கிழக்கு மாகெதர கிழக்குப் பிராந்திய நுகர்வோர் சங்கம்
காலி பத்தேகம 191 C – தெய்வந்துறை தெய்வந்துறைப் பிராந்திய நுகர்வோர் சங்கம்
காலி ஹபராதுவ 144 A – கொக்கல கொக்கலப் பிராந்திய நுகர்வோர் சங்கம்
காலி இமாதுவ 153 – தொரபே தொரபேப் பிராந்திய நுகர்வோர் சங்கம்
2 சபரகமுவ மாகணம் இரத்தினபுரி கிரியெல்ல தொடம்பே தொடம்பேப் பிராந்திய நுகர்வோர் சங்கம்
இரத்தினபுரி பெல்மடுல்ல தெனவக்கதக்கட தெனவக்கபதக்கடப் பிராந்திய நுகர்வோர் சங்கம்
இரத்தினபுரி கஹவத்த கலல்லெல்ல கலல்லெல்லப் பிராந்திய நுகர்வோர் சங்கம்
இரத்தினபுரி ஓப்பநாயக்க தந்தெனிய தந்தெனியப் பிராந்திய நுகர்வோர் சங்கம்
இரத்தினபுரி குருவிட்ட நடுக்காரதெனிய பருத்தித்துறைப் பிராந்திய நுகர்வோர் சங்கம்
3 வட மேல் மாகாணம் குருனாகல் குளியாப்பிட்டிய மீகஹட்டுவ மீகஹட்டுவப் பிராந்திய நுகர்வோர் சங்கம்
குருனாகல் பிங்கிரிய இஹல கடிகமுவ இஹலக் கடிகமுவ பிராந்திய நுகர்வோர் சங்கம்
குருனாகல் உடுபத்தாவ சியம்பலாகஸ்ருப்பே சியம்பலாகஸ்ருப்பேப் பிராந்திய நுகர்வோர் சங்கம்
புத்தளம் மகவெவ ஹொரகொல்ல – தெற்கு ஹொரகொல்ல தென் பிராந்திய நுகர்வோர் சங்கம்
புத்தளம் மாதம்பே ஊரெலியகார ஊரெலியகாரப் பிராந்திய நுகர்வோர் சங்கம்
4 மத்திய மாகாணம் கண்டி கண்டி 258 – கட்டுகெலே மேற்கு கட்டுகெலே மேற்குப் பிராந்திய நுகர்வோர் சங்கம்
கண்டி கண்டி 265 – சுதும்பொல கிழக்கு சுதுஹும்பொலக் கிழக்குப் பிராந்திய நுகர்வோர் சங்கம்
கண்டி கண்டி 262 – நாகஸ்தென்ன நாகஸ்தென்ன பிராந்திய நுகர்வோர் சங்கம்
கண்டி கண்டி 263 – ஹந்தன இடம் ஹந்தன இடப் பிராந்திய நுகர்வோர் சங்கம்
கண்டி கண்டி 258 – மேல் கொத்மலை மேல்கொத்மலைப் பிராந்திய நுகர்வோர் சங்கம்
5 North Central Province அனுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய ரத்மலை ரத்மலைப் பிராந்திய நுகர்வோர் சங்கம்
அனுராதபுரம் நுவரகம் பளாத்த – கிழக்கு கட்டம் – II கட்டம் – II பிராந்தி நுகர்வோர் சங்கம்
அனுராதபுரம் நுவரகம் பளாத்த – கிழக்கு கட்டம் – III கட்டம் – III பிராந்தி நுகர்வோர் சங்கம்
அனுராதபுரம் புபுதுபுர புபுதுபுர புபுதுப்புரப் பிராந்திய நுகர்வோர் சங்கம்
அனுராதபுரம் நுவரப் பளாத்த – மத்திய பண்டுலுவெவ பண்டுலுவெவப் பிராந்திய நுகர்வோர் சங்கம்