பிணக்குகள் தீர்த்தல் முறைமைக்கான பிரவேசம்

நுகர்வோர் ஆலோசனைக் குழு

இ.பொ.ப.ஆ சட்டத்தின் 29 ஆம் பிரிவின் கீழ் ஆணைக்குழுவினால் உருவாக்கப்பட்ட நுகர்வோர் ஆலோசனைக் குழு (நு.ஆ.கு), ஒழுங்குறுத்தப்பட்ட கைத்தொழில்களின் ஏற்கனவேயுள்ள, சாத்தியமான சிறியளவில் மின்சாரத்தை நுகர்பவர்களின் நலன்களைப் பிரதிநிதிப்படுத்துவதோடு, அரசாங்கத்திற்கும், சேவை வழங்கும் தரப்புகளுக்கும், பாரியளவில் மின்சாரத்தை நுகர்பவர்களுக்கும் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் முன்வைப்பதில் ஒரு நிகரொத்த அமைப்பாகவும் தொழிற்பட்டு வருகின்றது.
இந்த நு.ஆ குழுவில் தற்பொழுது 15 குழு உறுப்பினர்கள் அடங்கியிருக்கின்றனர். இந்த உறுப்பினர்கள் பெருமளவான மின்சார நுகர்வோரின் நலன்களைப் பிரதிநிதிப்படுத்தும் நிமித்தம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர். குறித்த கைத்தொழில் சம்பந்தப்பட்ட பல வகையான பிரச்சினைகள் பற்றி ஆராயும் பொருட்டு தன்னார்வ அடிப்படையில் வழமையான கூட்டங்களில் இந்த உறுப்பினர்கள் கலந்துகொள்ளுகின்றனர்.

தற்போதைய உறுப்புரிமை

நு.ஆ குழுவின் தற்போதைய உறுப்புரிமையில் பின்வரும் நபர்கள் உள்ளடங்குகின்றனர்:

  • 09 மாகாணங்களிலிருந்தும் ஒவ்வொரு பிரதிநிதி – இவர்களில் மூவர் ஒரு வருடத்திற்கும், மற்றைய மூவர் இரண்டு வருடங்களுக்கும், எஞ்சிய மூவர் மூன்று வருடங்களுக்கும் என நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • ஸ்ரீ லங்கா ஒட்டோமோபைல் அசோஸியேஸன் கம்பனியிலிருந்து ஒரு பிரதிநிதி – இவர் இரண்டு வருடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவகத்திலிருந்து ஒரு பிரதிநிதி – இவர் ஒரு வருடத்திற்கு நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இலங்கை சக்தி முகாமையாளர்கள் சங்கத்திலிருந்து (SLEMA) ஒரு பிரதிநிதி – இவர் மூன்று வருடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தேசிய வர்த்தக கூடத்திலிருந்து ஒரு பிரதிநிதி – இவர் மூன்று வருடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இலங்கை வர்த்தக கூடகத்திலிருந்து ஒரு பிரதிநிதி – இவர் மூன்று வருடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
  • வர்த்தக கூட சம்மேளனத்திலிருந்து ஒரு பிரதிநிதி – இவர் மூன்று வருடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

நு.ஆ குழுவின் தொழிற்பாடுகள்

இ.பொ.ப.ஆ சட்டத்தின் 29 (3) ஆம் பிரிவில் இனம்காணப்பட்டவாறு நு.ஆ குழுவின் தொழிற்பாடுகள் பின்வருமாறு:

  • நுகர்வோருக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான பொருத்தமான நியமங்கள் தொடர்பில் இ.பொ.ப.ஆ குழுவுக்கு ஆலோசனை வழங்குதல்.
  • பொதுப் பயன்பாடுகள் சார்ந்த ஏதாவதொரு கைத்தொழிலினால் வழங்கப்படுகின்ற நுகர்வோர் பொருட்கள் அல்லது சேவைகள் என்பவற்றின் தேவைகள் திருப்தியான முறையில் நிறைவேறுகின்றனவா என்பது பற்றிக் கண்காணித்தல்.
  • அத்தகைய நியமங்கள் தொடர்பான நுகர்வோர் உரிமைகள் மற்றும் குறிப்பீடுசெய்யப்படும் அல்லது நிர்ணயிக்கப்படும் நியமங்கள் என்பன தொடர்பிலான விழிப்புணர்வை மேம்படுத்துதல்.

ஆலோசனைகள்

பொதுப் பயன்பாடு சார்ந்த துறை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதாவது, குறிப்பாக நுகர்வோரைப் பாதிக்கும் விடயங்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகளையும் கேட்டறிவதற்காக பொதுமக்களுடன் கூட்டங்களை நடாத்துவது இந்த நு.ஆ குழுவின் பிரதான செயற்பாடுகளில் ஒரு செயற்பாடாகும். பொதுப் பன்பாடுகள் சார்ந்த கம்பனிகளினால் மேற்கொள்ளப்பட்ட பல வகையான தீர்மானங்கள் தொடர்பில் பொது மக்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளுவதற்கு நு.ஆ.கு எதிர்பார்க்கின்றது. பொதுமக்களிடமிருந்து கருத்துக்களைக் கேட்டறியும் கூட்டங்கள் ஒவ்வொரு மாகாணத்திலும் நடாத்தப்படவுள்ளன.

நு.ஆ குழுவுடன் தொடர்புகொள்ளுங்கள்

தலைவர் – நுகர்வோர் ஆலோசனைக் குழு
இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
06-வது மாடி, இ.வ வர்த்தகக் கோபுரம்,
இலக்கம் 28, புனித மைக்கல் வீதி,
கொழும்பு 03, ஸ்ரீ லங்கா.

மின்னஞ்சல்: ccc@pucsl.gov.lk
தொலைபேசி: +94 11 2392607
தொலைநகல்: +94 11 2392641