பிணக்குகள் தீர்த்தல் முறைமைக்கான பிரவேசம்

நுகர்வோர் முறைப்பாடுகள்

நுகர்பவர் ஒருவரின் முறைப்பாட்டைக் கோவைப்படுத்துதல்

ஒரு நுகர்பவர் அல்லது ஒரு மின்சார இணைப்பைப் பெறுவதற்கு எதிர்பார்க்கின்ற நபர் என்ற ரீதியில், இலங்கை மின்சார சபை (இ.மி.ச) அல்லது லங்கா இலெக்ட்ரிச்சிற்றிக் கம்பனி (ப்ரைவட்) லிமிற்றட் (லெகோ) ஆகிய இரண்டு மின்சார சேவை வழங்கும் தரப்புகளிடமிருந்து ஒரு புதிய மின்சார இணைப்பைப் பெறுவது தொடர்பில் விசாரித்து நீங்கள் அறிந்து கொள்ளுவதற்கான அல்லது ஒரு சில பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளுவதற்கான ஒருசில சந்தர்ப்பங்கள் இருக்கக்கூடும்.

முறைப்பாடுகள்:

பின்வருவன தொடர்பில் எழும் முறைப்பாடுகள்:

 • மின்சாரக் கட்டணங்கள்
 • மின்சார நுகர்வுக் கணிப்பீடு
 • உங்களுக்குரிய மின்சார வரித்தீர்வை வகுதி
 • மின்சாரம் தொடர்பான பிரச்சினை
 • உங்களது காணிக்கு மேலால் செல்லுகின்ற மின்சார மார்க்கங்கள்
 • மின்சார ஏற்றத்தாழ்வுகள் முதலியவற்றின் விளைவாக உங்களது மின்னுபகரணங்களுக்கு ஏற்படும் பாதிப்பு

இந்த அனைத்து விடயங்களிலும், நீங்கள் இந்த நாட்டின் ஒரு பிரஜை என்ற வகையில், மின்சாரம் சார்ந்த சேவை வழங்கும் தரப்பிடமிருந்து (இ.மி.ச / லெகோ) சாதாரண, நியாயமான ஒரு பதிலைப் பெறுவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கின்றது.

நீங்கள் செய்யவேண்டியது என்ன?

மேற்கூறப்பட்ட அனைத்து விடயங்களிலும், முதலாவது அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளும் பொருட்டு உங்களது சேவை வழங்கும் தரப்பைத் (இலங்கை மின்சார சபை, லங்கா இலெக்ட்ரிசிற்றி கம்பனி (ப்ரைவட்) லிமிற்றட்) தொடர்புகொள்ளுதல் வேண்டும். எனினும், அந்தத் தரப்புகளிடமிருந்து உங்களுக்கு திருப்தியான ஒரு பதில் கிடைக்கவில்லையெனில், நீங்கள் எங்களுக்கு ஒரு முறைப்பாட்டைச் செய்யலாம்.

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவலாம்:

மின்சாரம் சார்ந்த கைத்தொழிலுக்கான ஒழுங்குறுத்துநர் என்ற ரீதியில், 2009 இன் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தை நிறைவேற்றி உங்களுக்கு உதவும் பொருட்டு எமக்கு அதிகாரத்தத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் நேரடியான முறைப்பாடுகளைக் கருத்திற்கொள்ளுவதில்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விடயமாகும். இது நீங்கள் முதலில் உங்களது சேவை வழங்கும் தரப்புக்கு உங்களது முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதைக் கருதும். ஒரு தீர்வு எட்டப்படவில்லை என்பதன் பேரில், நீங்கள் எமக்கு முறைப்பாடு செய்யலாம். அவ்வாறு நீங்கள் ஒரு முறைப்பாட்டைச் செய்கின்ற போது, உங்களது சேவை வழங்கும் தரப்புக்கு நீங்கள் ஏற்கனவே முறைப்பாட்டைச் செய்துள்ளீர்கள் என்பதை நிறூபிப்பது அவசியம் ஆகும்.

நாங்கள் எடுக்கும் நடவடிக்கை:

ஒரு முறைப்பாடு கிடைத்ததன் பேரில்:

 • உங்களது சேவை வழங்கும் தரப்பிடமிருந்து அவதானிப்புகளை அழைத்துப் பெறுவதற்கு அல்லது சில நேரங்களில், மேலதிகத் தகவல்களுக்காக உங்களுடன் அல்லது ஏதாவது பிற உரிய தரப்புகளுடன் தொடர்புகொள்ளுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
 • அனைத்து வகையான தகவல்களையும் பெற்று மீளாய்வு செய்ததன் பின்னர், எங்களுடைய சிபாரிசுகள் பற்றி உங்களுக்கு, உங்களது சேவை வழங்கும் தரப்புகளுக்கு அல்லது ஏதாவது பிற உரிய தரப்புகளுக்கு அறிவிக்கப்படும்.
 • சில நேரங்களில், எமது சிபாரிசுகளை விடுக்க முன்னர், முறைப்பாட்டுக்கான உரிய சகல தரப்புகளுடனும் நாம் தொடர்புகொண்டு எங்களுடன் ஒரு சந்திப்புக்காக அந்தத் தரப்புகளை அழைப்போம், அல்லது சில சந்தர்ப்பங்களில் ஒரு சோதனைக்காக வேண்டி உரிய வளாகங்களுக்கு நாம் சென்று பார்ப்போம்.

ஒன்லைன் முறைப்பாடு:

புதிய பயனர் பதிவு

 • மின்சாரசார் சேவை (ஒன்லைனுக்கு) உங்களது சம்பந்தப்பட்ட முறைப்பாட்டை நீங்கள் சமர்ப்பிக்க விரும்பினால், நீங்கள் உங்களைப் பதிவுசெய்துகொள்ளுதல் வேண்டும். தயவுசெய்து பதிவுசெய்.
 • நீங்கள் வெற்றிகரமாகப் பதிவுசெய்யப்பட்ட பின்னர் இந்த எமது ஒன்லைன் முறைமையில் பிரவேசிக்கும் நிமித்தம் ஒரு பயனர் பெயரும் ஒரு கடவுச்சொல்லும் ஒதுக்கப்பட்டு அவை உங்களுக்கு அறிவிக்கப்படும்.

நீங்கள் இந்த முறைப்பாட்டினை இ.மி.ச/இ.மி.நி சமர்ப்பித்தும் இன்னும் திருப்தியானதொரு பதில் கிட்டவில்லை எனின் இங்கே “கிளிக்” செய்து எம்முடன் பதிவு செய்து கொள்ளவும்.

பதிவுசெய்யப்பட்ட பயனர்கள்

 • உங்களது மனக்குறையின் (முறைப்பாட்டின்) நிலை பற்றி அறிந்துகொள்ளுவதற்கு முதலில் ‘லொக்இன்’ ஆகுங்கள். நீங்கள் பதிவுசெய்யதவுடன் பல வகையான மனக்குறைகளையும் உங்களது எதிர்கால மனக்குறைகளையும் அதே பயனர் பெயரின் கீழ் பதிவுசெய்யலாம் (நீங்கள் மீண்டும் உங்களைப் பதிவு செய்ய அவசியமில்லை).
 • உங்களது முறைப்பாட்டின் அல்லது விசாரணையின் நிலை பற்றித் தேடுவதற்கு, தயவுசெய்து ‘சைன்இன்’ ஆகுங்கள். உங்களுக்கு உங்களது அறிமுக ஆவணங்கள் தெரியாதெனில், தயவுசெய்து எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்..