2019 ஆம் ஆண்டுக்கான வருடாந்த நடவடிக்கைத் திட்டம் வெளியிடல்

ஊடக அறிவித்தல் 2019 ஆம் ஆண்டுக்கான வருடாந்த நடவடிக்கைத் திட்டம் வெளியிடல் 2019 வருடாந்த நடவடிக்கைத் திட்டம் தரவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்கு 2019 ஆம் ஆண்டுக்கான வருடாந்த நடவடிக்கைத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. மின்சார தொழிற்துறை மற்றும் நீர்சார் தொழிற்துறை, கனியவளம் சார்ந்த துறைகளின்  தரம் மற்றும் சூழலுக்கேற்ற மாற்று ஒழுங்குறுத்துகை நடவடிக்கை … தொடர்

கட்டிடக்கூரைகளின் மேல் சூரிய சக்தி மூலமான மின் பிறப்பாக்கத்திற்கான ஒழுங்கு விதிகள்

கட்டிடக்கூரைகளின் மேல் சூரிய சக்தி மூலமான மின் பிறப்பாக்கத்திற்கான ஒழுங்கு விதிகள் ஆலோசனை ஆவணத்தை பதிவிறக்குக Net Metering Application (CEB-Region 01) Net Metering Application (LECO) (28/9/2017)- கட்டிடக்கூரைகளின் மேல் சூரிய சக்தி மூலமான மின் பிறப்பாக்க அபிவிருத்தி மீதான ஒரு பொதுமக்கள் ஆலோசனையளிப்பினை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. கூரைகளின் … தொடர்

2020 மற்றும் அதற்கும் அப்பால் இலங்கையின் மின்சார வழங்கல்

(19/09/2017) – குறை செலவு – நீண்டகால மின் பிறப்பாக்க விரிவாக்கத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் காரணமாக, செலவின் மிகையோட்டம் திட்டமிடப்படாத மின் கொள்முதல் ஆகியன கடந்த ஆண்டுகளில் இடம்பெற்றுள்ளன. மேலும், இத்திட்டத்தின் நடைமுறைப்படுத்தல் இல்லாத பட்சத்தில் இந்த விளைவுகள் அடுத்த சில ஆண்டுகளிலும் தொடரும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தன் … தொடர்

மின் வாகன மின்னேற்ற நிலைய ஒழுங்குவிதி: பொதுமக்கள் பார்வைக்கான அழைப்பு

ஆலோசனையளிப்பு ஆவணத்தை இங்கு பதிவிறக்குக (13/09/2017) – இலங்கையின் மின் துறையின் ஒழுங்குறுத்துநரான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற நிலையங்கள் (electric vehicle charging stations) மற்றும் அவற்றுக்கான நுகர்வோர் தொடர்பினால பிரச்சினைகள் மீதான மக்கள் கருத்துகளை எதிர்பார்க்கின்றது. இக்கருத்துகள் இப்பிரச்சினை மீதான ஒழுங்குறுத்துகை நெறிமுறைகளை உருவாக்க உதவும். இவ்வகையான ஒவ்வொரு … தொடர்

அடுத்த 20 ஆண்டுகளுக்கான மின் பிறப்பாக்கத் திட்டத்திற்கு அனுமதி

(20/07/2017)- இலங்கையின் மின்சாரத்துறை ஒழுங்குறுத்துநரான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியினைக் கோரி இலங்கை மின்சார சபையானது “குறை செலவு நீண்ட கால மின் பிறப்பாக்க விரிவாக்கத்திட்டம் 2018-2037 (LCLTGEP)” இனைச் சமர்ப்பித்து இருந்தது. இலங்கைக்கான தொடர்ச்சியான மின் வழங்கல் மற்றும் சக்திப் பாதுகாப்பு ஆகிய நோக்குகளுடன், இத்திட்டத்தின் வழியாக காண்பிக்கப்பட்ட பல்வேறு தெரிவுகளில் சிறந்ததொரு … தொடர்

”சதுரமுனை” பிளக்குகள் மற்றும் சொக்கெற் அவுட்லெட்டுகளுக்கான தரச்சான்று நியமங்கள்

(10-07-2017) இலங்கையில் பல்வேறுவகையான பிளக்குகளும் சொக்கெற்றுகளும் மின் இணைப்புத் துணைக்கருவிகளும் புழக்கத்தில் இருந்து வருகின்றன. தரமற்ற பிளக்குகள் மற்றும் சொக்கெற்றுகளால் இதுவரைகாலமும் மின் விபத்துகள், மின்கருவிச் சேதங்கள், மின்கருவிச் சிதைவுகள் ஆகியவை நிகழ்ந்து வந்துள்ளன. பிளக்குகள் மற்றும் சொக்கெற்றுகளுக்கான முறைப்படுத்தல் மற்றும் நியமம் ஆகியவற்றுக்கான தேவை சமூகத்தில் நிலவிய வண்ணமே உள்ளது. 13 அம்பியர் பிளக் … தொடர்

புதிய மின் பிறப்பித்தல் திட்ட யோசனைகளை உருவாக்குமாறு கோரிக்கை

(29/06/2017) – வெவ்வேறான மின்னிலையங்களின் பிணைப்புகளை அளிக்க வல்ல 12 புதிய சூழ்நிலைகளை அபிவிருத்தி செய்யுமாறும் 07 ஜூலை 2017க்கு முன்னர் அவற்றைச் சமர்ப்பிக்குமாறும், மின்சாரத்துறை ஒழுங்குறுத்துநரான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது இலங்கை மின்சார சபையைக் கோரியுள்ளது. மேலும், இச்சூழ்நிலைகள் நிலக்கரி, இயற்கை வாயு மற்றும் எண்ணெய் ஆகியவற்றின் தற்போதைய விலைகளையும் சமூக மற்றும் … தொடர்

பொதுமக்களின் கருத்தை எதிர்பார்க்கிறது பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

16-05-2017 – இலங்கையின் மின்சாரத் தொழிற்றுறையின் ஒழுங்குறுத்துநரான இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, இலங்கை மின்சார சபையினால் தயாரிக்கப்பட்ட “குறை செலவு நீண்ட கால மின் பிறப்பாக்க விரிவாக்கத் திட்டம் 2018 – 2037 (Least Cost Long Term Generation Expansion Plan (LCLTGEP) 2018-2037)” தொடர்பில் பொதுமக்களின் கருத்து வெளிப்பாட்டிற்குப் பாதை அமைத்துள்ளது. … தொடர்

ஒற்றை மின்வழி மின்சார நுகர்வோருக்கு நேர அடிப்படையிலான புதிய மின் கட்டண முறை

ஊடக அறிக்கை (04/05/2017) – இலங்கையின் மின்சரத் தொழிற்றுறை ஒழுங்குறுத்துநரான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, ஒற்றை மின்வழியினைப் பயன்படுத்தும் உள்நாட்டு மின் நுகர்வோருக்கு நேர அடிப்படையிலான வரித்தீர்வைக் கட்டண முறையினை அனுமதித்து உள்ளது. இதற்கு முன்னர் இந்த முறையானது மூன்று மின்வழி இணைப்புகளைக் கொண்ட மற்றும் 30A மற்றும் அதற்கு அதிகமாக மின் நுகர்கின்ற … தொடர்

பிறப்பாக்கத் தரவு – பாரிய வழங்கல் வரித்தீர்வைச் சமர்ப்பிப்பு – ஏப்ரல் – செப்டெம்பர்

பிறப்பாக்கத் தரவு – பாரிய வழங்கல் வரித்தீர்வைச் சமர்ப்பிப்பு – ஏப்ரல் – செப்டெம்பர் முழு அறிக்கையினைப் பதிவிறக்குக. பிறப்பாக்கத் தரவு – பாரிய வழங்கல் வரித்தீர்வைச் சமர்ப்பிப்பு – ஏப்ரல் – செப்டெம்பர் சுருக்க அறிக்கையினைப் பதிவிறக்குக. பிறப்பாக்கத் தரவு – பாரிய வழங்கல் வரித்தீர்வைச் சமர்ப்பிப்பு – ஏப்ரல் – செப்டெம்பர் மின்னிலையத்தின் … தொடர்

நுரைச்சோலை மக்களின் சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்குத் தீர்வு

ஊடக அறிக்கை திகதி: 28/04/2017 நுரைச்சோலை மக்களின் சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்குத் தீர்வு இலங்கை மின்சாரத்துறையின் தொழினுட்ப, பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒழுங்குறுத்துநரான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, வட மேல் மாகாணத்தில் உள்ள நுரைச்சோலை நிலக்கரி மின்னிலையத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பில், அப்பிரதேசத்தில் வாழும் சமூகங்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளது. இலங்கையில் அனல் மின்சார உற்பத்தி … தொடர்

ஊடக அறிக்கை : இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவால் இரண்டாம் தடவையாகவும் நடத்தப்பட்ட நுகர்வோர் உரிமைகள் மன்றம் 2017.

திகதி : 28/03/2017 இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவால் இரண்டாம் தடவையாகவும் நடத்தப்பட்ட நுகர்வோர் உரிமைகள் மன்றம் 2017. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தனது இரண்டாவது “நுகர்வோர் உரிமைகள் மன்றத்தினை” பல்வேறு விற்பன்னர்கள் அடங்கிய கலந்துரையாடற் குழுவுடன் நடத்தியுள்ளது. இந்நிகழ்வு செவ்வாய் 28 மார்ச் 2017 அன்று சர்வதேசக் கற்கைகளுக்கான பண்டாரநாயக்க மையத்தில் நடைபெற்றது. இலங்கை … தொடர்

ஊடக அறிக்கை : மின் கடத்தும் வடங்களுக்கு அருகில் புதிய கட்டிடங்கள் கட்டப்படுவதை தடுப்பதற்கான புதிய ஒழுங்குவிதி.

ஊடக அறிக்கை திகதி : 20/03/2017 மின் கடத்தும் வடங்களுக்கு அருகில் புதிய கட்டிடங்கள் கட்டப்படுவதை தடுப்பதற்கான புதிய ஒழுங்குவிதி. மின் கடத்தும் வடங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு இடையில் இருக்க வேண்டிய குறைந்த பட்ச இடைவெளி தொடர்பான புதிய ஒழுங்குவிதியை இலங்கை அறிமுகப்படுத்துகின்றது. இந்த ஒழுங்குவிதி மூலம் நுகர்வோர்கள் மற்றும் சொத்துகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். இந்த … தொடர்

பொதுமக்கள் கருத்தைக் கோரும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு.

திகதி: 28/02/2017 : இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கோரி, இலங்கை மின்சார சபையால் “குறைந்த செலவு – நீண்டகால மின் பிறப்பாக்க விரிவாக்கத் திட்டம் (LCLTGEP) 2018-2037” ஆனது, அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ’உள்ளீட்டு அளவுருக்கள் மற்றும் அனுமானங்கள் (input data parameters and assumptions)’ ஆனவை, இத்திட்டத்தின் தயாரிப்பின் அடிப்படையாக இருந்தமையுடன் … தொடர்

காப்பு வைப்புப்பணத்திற்கு வட்டி: வழிகாட்டுகின்றது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு.

(31/01/17) – மின்சாரத் தொழிற்றுறை ஒழுங்குறுத்துநரான இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, மின்சார நுகர்வோர்கள் மின் இணைப்பின் போது செலுத்தும் காப்பு வைப்புப் பணத்திற்கு உரிய வட்டியினை நுகர்வோர்களுக்குச் செலுத்துவதற்கான வழிகாட்டல் ஆவணத்தைத் தயாரித்து உள்ளது. இந்த வழிகாட்டல் ஆவணம் பிரதான மின் சேவை வழங்குநர்களான இலங்கை மின்சார சபை மற்றும் லங்கா எலெக்ரிசிட்டி தனியார் நிறுவனம் … தொடர்

இரு வாரங்களில், தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ள கூரைச் சூரியப் படல்கள்

(25/01/2017) – இலங்கையின் மின்சாரத் தொழிற்றுறையின் ஒழுங்குறுத்துநராகப் பணியாற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆனது, உள்நாட்டில் கூரைகளின் மேல், மின் பிறப்பாக்கத்திற்காக பொருத்தப்பட்டுள்ள சூரியப் படல்களை, இரு வாரங்களுக்குள் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்குமாறு, மின்சேவை வழங்குநர்களான இலங்கை மின்சார சபை மற்றும் லங்கா எலெக்ரிசிட்டி நிறுவனம் (LECO) ஆகியவற்றைப் பணித்துள்ளது. இதுபற்றி கருத்துத் தெரிவித்த, … தொடர்

புதிய மின் இணைப்புக் கட்டணத்தை செலுத்துவதற்கு இயலாத உள்நாட்டு மின் நுகர்வோர்களை கண்டறிவதற்கான ஒரு வழிகாட்டி அறிமுகம்

(18/01/2017) – இலங்கையின் மின்சாரத் தொழிற்றுறைக்கான ஒழுங்குறுத்துநராக இயங்கிவரும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, புதிய மின் இணைப்புக் கட்டணத்தை செலுத்துவதற்கு இயலாத உள்நாட்டு மின் நுகர்வோர்களை கண்டறிவதற்கான ஒரு வழிகாட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. 2009ம் ஆண்டு 20ம் இலக்க திருத்தப்பட்ட இலங்கை மின்சாரச் சட்டத்தின் 27ம் பிரிவுக்கு அமைய இவ் வழிகாட்டி அமைந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. இது … தொடர்

2017ல் சாத்தியமுள்ள மின்சக்தி நெருக்கடியை முகம்கொடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை ஆணைக்குழுவானது பரிந்துரைக்கிறது

மின்சக்தி வழங்கல் நிலமை மீதான பகுப்பாய்வு – ஜனவரி – ஏப்ரல் 2017 ஆணைக்குழுவின் பரிந்துரைகள் பரிந்துரைகளுக்கான கடிதம்

வீட்டுக் கூரையில் சூரிய மின்சக்திப் பிறப்பாக்கத்தை ஊக்குவிப்பதற்கான சட்ட வரைபை அறிமுகப்படுத்துகிறது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு.

/ (25/11/2016) சூரியசக்தியின் மூலம் மின்சாரத்தை பிறப்பிக்க விரும்பும் சமூகங்களுக்கு இருக்கும் சட்ட ரீதியான தடைகளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஆனது நீக்குவதற்குத் தீர்மானித்துள்ளது. அதனால், தேசிய மின் கட்டமைப்பிற்கு மின்சாரத்தை விற்கவும் வீட்டுக் கூரை மேல் சூரிய மின்சக்தியினை உற்பத்தி செய்யவும் தேவைப்படும் உரிமம் பெறும் செயற்பாட்டிலிருந்து, வீட்டுக் கூரையின் மேல் … தொடர்