சக்தி மன்றம் – தேசத்திற்கு சக்தியூட்டல்: சக்திப் பாதுகாப்பிற்கான பொருளாதாரம் மற்றும் கொள்கை

சக்தி மன்றம் ஆனது 26-10-2017 அன்று ரமடா ஹோட்டலின் ரோயல் போர்ட் ரூம் இல் நடைபெற உள்ளது. நெறியாளர்: கலாநிதி நிஷான் டி மெல் நிறைவேற்றுப் பணிப்பாளர், வேர்ட்டே ரிசேர்ச் பிரைவேற் லிமிட்டட் பிரதான உரை: கலாநிதி ஹர்ஷ டி சில்வா கௌரவ. பிரதி அமைச்சர், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு உறையாடற் … தொடர்

மின் வாகன மின்னேற்ற நிலைய ஒழுங்குவிதி மீதான பொதுமக்கள் ஆலோசனையளிப்பின் வாய்மொழிமூல சமர்ப்பிப்பு

மின் வாகன மின்னேற்ற நிலைய ஒழுங்குவிதி மீதான பொதுமக்கள் ஆலோசனையளிப்பின் வாய்மொழிமூல சமர்ப்பிப்பு நிகழ்வு ஆனது வியாழன் 19-10-2017 அன்று நடைபெறும்.

உத்தேச பெற்றோலியத் தொழிற்றுறைச் சட்டகம் மீதான பட்டறை

உத்தேச பெற்றோலியத் தொழிற்றுறைச் சட்டகம் மீதான பட்டறை நிகழ்வானது 27 ஜூலை 2017 அன்று வோட்டர்ஸ் எட்ஜ், பத்தரமுல்லையில் நடைபெற உள்ளது.

நடத்தை அடிப்படையிலான ஒழுங்குவிதி மற்றும் தேவைப்பாடு சார் முகாமைத்துவம் தொடர்பிலான மீளாய்வு

ஐக்கிய அமெரிக்காவின் சக்தி மூலங்கள் பணியகத்தின் சக்தித் துறை நிகழ்ச்சித்திட்டத்தினால் அனுசரணையளிக்கப்படுவதும், ஒழுங்குறுத்தப்படும் பயன்பாடுகள் ஆணையாளர்களின் தேசிய சங்கத்தால் நடத்தப்படுவதுமான, நடத்தை அடிப்படையிலான ஒழுங்குவிதி மற்றும் தேவைப்பாடு சார் முகாமைத்துவம் தொடர்பிலான மீளாய்வு ஆனது, 2017 ஏப்ரல் 25 – 28ம் திகதிவரை கொழும்பு சினமன் கிராண்ட் ஹொட்டேலில் நடைபெறும். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு … தொடர்

நுகர்வோர் உரிமைகள் மன்றம் – 2017

நுகர்வோர் உரிமைகள் மன்றம் – 2017 ஆனது எதிர்வரும் செவ்வாய் 28-03-2017 அன்று, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள, சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க மையத்தில், காலை 9.30 தொடக்கம் 11.30 வரை நடைபெறவுள்ளது.

மின்னியலாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மின்னியலாளர்களுக்கு உரிமம் அளித்தல் மீதான விழிப்புணர்வுப் பிரசாரங்கள் நாடளாவிய ரீதியில் நடைபெறுகின்றன. அடுத்த விழிப்புணர்வு நிகழ்வானது மாத்தறையில் 22 பெப்ரவரி 2017 அன்று நடைபெறும்.

மின்னியலாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி – மன்னார்

மின்னியலாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆனது, மன்னார் “ஆஷா” ஹொட்டேலில் நடைபெறும். இந்த நிகழ்வு ஒரேஞ்ச் எலெக்ரிக்கல் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது அறிவு மற்றும் வளவாளர்களை வழங்கும்.

மின்னியலாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி – வவுனியா

மின்னியலாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆனது, வவுனியா “நெல்லி” ஹொட்டேலில் நடைபெறும். இந்த நிகழ்வு ஒரேஞ்ச் எலெக்ரிக்கல் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது அறிவு மற்றும் வளவாளர்களை வழங்கும்.

மின்னியலாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி – கேகாலை

மின்னியலாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆனது, கேகாலை “ஹெஷானி” ஹொட்டேலில் நடைபெறும். மின்னியலாளர்களுக்கான இரு நிகழ்வுகள் 7 மற்றும் 8ம் திகதிகளில் நடைபெறும். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது அறிவு மற்றும் வளவாளர்களை வழங்கும்.

கீழோட்ட இந்திய பெற்றோலியத் தொழிற்றுறை தொடர்பில் ஓர் அறிவுப் பகிர்வு நிகழ்வு

கீழோட்ட இந்திய பெற்றோலியத் தொழிற்றுறை ஒழுங்குறுத்துகை அனுபவம் தொடர்பில் திரு. கிருஷ்ணன் அவர்களால் ஓர் அறிவுப் பகிர்வு நிகழ்வு 24 – 26 ஜனவரி 2017ல் ஆணைக்குழுவில் நடைபெற உள்ளது. திரு. கிருஷ்ணன் அவர்கள், இந்திய அரசாங்கத்தின் பெற்றோலியம் மற்றும் இயற்கை வாயு ஒழுங்குறுத்துகை சபையின் முன்னாள் தலைவரும், இந்திய அரசாங்கத்தின் முன்னாள் செயலாளரும் ஆவார்.

சொக்கெட் அவுட்லெட் இயக்கும் குழுக் கூட்டம்

சொக்கெட் அவுட்லெட் நியமப்படுத்தல் இயக்கும் குழுக் கூட்டம் ஆனது, 13-01-2017 அன்று ஆணைக்குழுவில் நடைபெறும். இது இக்குழுவின் மூன்றாவது கூட்டமாகும்.

LECO- பாதுகாப்புக் கையேடு மீளாய்வுக்குழு

LECO- பாதுகாப்புக் கையேடு மீளாய்வுக்குழுக் கூட்டம் ஆனது, ஆணைக்குழுவில் 06-01-2017 அன்று நடைபெறும். LECO இனால் தயாரிக்கப்பட்ட பாதுகாப்புக் கையேட்டை மீளாய்வு செய்யும் மூன்றாவது குழுக்கூட்டம் இதுவாகும்.

உறவுக் கட்டியெழுப்பல் பட்டறை – தென் மாகாணத்தில் நுகர்வோர் வலையமைப்புகள்

தென் மாகாணத்தில் நுகர்வோர் வலையமைப்புகளுக்காக உறவுக் கட்டியெழுப்பல் நிகழ்ச்சி ஒன்று டிசம்பர் 20ம் திகதி காலி மாவட்ட செயலகத்தில் நடைபெற உள்ளது.

மின் பாதுகாப்பு தினம்

”மின் பாதுகாப்பு” பாடசாலை ஓவியம் மற்றும் சுவரொட்டிப் போட்டி 2016 இன் வெற்றியாளர்களுக்கு பரிசும் சான்றிதழ்களும் வழங்குவதற்கான மின் பாதுகாப்பு தினம் நிகழ்வானது 15-12-2016 அன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்வானது BMICH இன் “மிஹிலக மதுர” மண்டபத்தில் நடைபெறும்.

”பிளக் மற்றும் சொக்கெற் அவுட்லெட்டுகளுக்கான ஒற்றை நியமத்திற்கான தேவை” தொடர்பிலான பட்டறை

”பிளக் மற்றும் சொக்கெற் அவுட்லெட்டுகளுக்கான ஒற்றை நியமத்திற்கான தேவை” தொடர்பிலான பட்டறை ஆனது இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தின் (SLIDA) சன்ஹிந்த மண்டபத்தில் 07-12-2016 அன்று காலை 9.30 மணியளவில் நடைபெறும்.