குறிக்கோள்களும் தொழிற்பாடுகளும்

ஆணைக்குழுவின் தொழிற்பாடுகள்

 • ஆணைக்குழுவின் சட்டம் மற்றும் ஏனைய கைத்தொழில் சட்டம் ஆகிய சட்டங்களினால் ஆணைக்குழுவுக்கு குறித்தொதுக்கப்பட்ட அதிகாரத்தத்துவங்களைப் பிரயோகித்து, செயலாற்றி தனது தொழிற்பாடுகளையும் கடமைகளையும் நிறைவேற்றுதல்.
 • ஆணைக்குழுவின் தீர்மானங்களினால் பாதிக்கப்படலாமெனும் அல்லது அநேகமாகப் பாதிக்கப்படலாமெனும் எவரேனும் நபருக்கு அல்லது குழுவுக்கு ஆணைக்குழுவு பொருத்தமெனக் கருதுகின்ற அளவுக்கு ஆலோசனை வழங்குதல்.
 • ஆணைக்குழுவின் செயல்நோக்கினுள் வருகின்ற ஏதேனும் கைத்தொழில் சம்பந்தமான சகல விடயங்களிலும் ஆணைக்குழு பொருத்தமெனக் கருதுகின்றவாறு அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குதல்.
 • ஏதாவது பொதுப் பயன்பாடுகள் சார்ந்த கைத்தொழில் சம்பந்தமான தகவல்களைச் சேகரித்து, பதிந்து அந்தத் தகவல்களைப் பரப்புதல்.
 • ஏதாவது ஒரு கைத்தொழில் சட்டத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள சகலவிதமான விடயங்கள் தொடர்பிலும் அனுமதிப்பத்திரம் வழங்கல், ஒழுங்குறுத்துதல், சோதனையிடுதல் ஆகிய தொழிற்பாடுகளை நிறைவேற்றுதல்.
 • ஏதாவது கைத்தொழில் அதிகாரச் சட்டத்தின் அதிகாரத்தின் கீழ் விநியோகிக்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள், செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், பத்திரங்கள் என்பவற்றின் சட்டஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துதல்.
 • ஒழுங்குறுத்தப்படும் நிறுவனங்கள் விதிக்கின்ற வரித்தீர்வைகள் மற்றும் ஏனைய கட்டணங்கள் என்பவற்றை தேவையானவிடத்து ஒழுங்குறுத்துதல்.
 • பொதுப் பயன்பாடுகள் சார்ந்த ஏதாவது கைத்தொழிலில் எழுகின்ற பிணக்குகளை நடுத்தீர்ப்பின் மூலம் தீர்த்து வைத்தல்.
 • பொதுப் பயன்பாடுகள் சாந்த கைத்தொழில்களின் பாதுகாப்பு, தரம், தொடர்தன்மை, நம்பத்தகுதன்மை என்பன தொடர்பான தொழில்நுட்ப மற்றும் ஏனைய நியமங்களை விதித்து அவற்றை நடைமுறைப்படுத்துதல்.
 • ஆணைக்குழுவின் ஏதாவதொரு தொழிற்பாட்டை சிறந்த முறையில் நிறைவேற்றும் பொருட்டு அத்தகைய இணைந்த செயற்பாடுகளை அல்லது ஏனைய துணைச் செயற்பாடுகளை மேற்கொண்டு நிறைவேற்றுதல்.

 

குறிக்கோள்கள்

இ.பொ.ப.ஆ சட்டத்தில்-(ஆங்கில மொழியில்) குறிக்கோள்களை அடையும் நிமித்தம் மேற்கூறப்பட்ட தொழிற்பாடுகள் ஆணைக்குழுவினால் நிறைவேற்றப்படுகின்றன. இந்தக் குறிக்கோள்கள் கீழே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

 

 • சகல மின்சார நுகர்வோரினதும் நலன்களைப் பாதுகாத்தல்
 • போட்டித்தன்மையை ஊக்குவித்தல்
 • பொதுப் பயன்பாடுகள் சார்ந்த கைத்தொழில்களிலுள்ள இயக்கச்செயற்பாடுகளினதும் மற்றும் மூலதன முதலீடுகளினதும் வினைத்திறனை மேம்படுத்துதல்
 • பொதுப் பயன்பாடுகள் சார்ந்த கைத்தொழில்களிலுள்ள வளங்களின் வினைத்திறன் வாய்ந்த ஒதுக்கீட்டை ஊக்குவித்தல்
 • பொதுப் பயன்பாடுகள் சார்ந்த கைத்தொழில்களிலுள்ள சேவையின் தரத்தையும் மற்றும் பாதுகாப்பையும் மேம்படுத்துதல்
 • சாத்தியமானவிடத்து, பொதுப் பயன்பாடுகள் சார்ந்த சேவைகளின் நியமங்களை சர்வதேச நியமங்களுக்கு நிகரானதாக ஆக்குதல்
 • வினைத்திறன் வாய்ந்த ரீதியில் தொழிற்படுகின்ற விலைக் கட்டுப்பாடுடைய பொதுப் பயன்பாடுகள் சார்ந்த அமைப்புகள், பொதுப் பயன்பாடுகள் சார்ந்த தமது கைத்தொழில்களில் நிதியிடுவதை அதிகளவு கஷ்டம் எனக் காணக்கூடாது என்பதை உறுதிசெய்துகொள்ளுதல்