பிணக்குகள் தீர்த்தல் முறைமைக்கான பிரவேசம்

அடிப்படை விழுமியங்கள்

நியாயம்

எமது குறிக்கோள்கள், கடமைகள் மற்றும் தொழிற்பாடுகள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய சிறந்த செயன்முறைகளை உறுதிசெய்கின்ற ஒரு விதத்தில் நாங்கள் எமது தீர்மானங்களை எடுப்போம்.

பாரபட்சமின்மை

எமது சட்டமுறைக் கடமைகளைக் கருத்திற்கொண்டு, எமக்குக் கிடைக்கின்ற சகல விதமான கருத்துக்களையும், கருத்துரைகளையும், முறைப்பாடுகளையும் ஏற்று எமக்குப் பொருத்தமான அனைத்து விடயங்களையும் பாரபட்சமற்ற முறையில் கவனித்து நிறைவேற்றுவோம்.

சுயாதீனத்துவம்

எமது சகல தீர்மானங்களையும் எவ்விதமான செல்வாக்குகளுக்கும் இடமளிக்காது நாம் சுயாதீனமான முறையில் மேற்கொள்ளுவோம்.

காலம் தவறாமை

தாமதங்கள் என்பது பண விரயத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தும் என்பதை நாங்கள் உணர்கின்றோம். எம்மிடம் வந்து சேருகின்ற ஏதாவது விடயங்களுக்கு கூடுமான விரைவில் பதிலளிக்க நாம் முயற்சிப்போம்.

வெளிப்படைத்தன்மை

இரகஷியம் பேணுதலினால் அல்லது சட்ட வரையறைகளினால் தடுத்து வரையறுக்கப்படாத சந்தர்ப்பங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் சகல விதமான சான்றுகள், தீர்மானங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் முதலியவற்றை நாங்கள் பொதுவாக வெளிப்படையாகப் பிரசுரிப்போம். நாங்கள் கருத்திற்கொள்ளுகின்ற விடயங்கள் மற்றும் நடைமுறைகள் என்பன பற்றி அக்கறையுடைய சகல தரப்புகளுக்கும் நாம் அறிவிப்போம். எங்களுடைய செயற்பாடுகளையும் அந்தச் செயற்பாடுகளின் கிரயங்களையும் விபரிக்குகின்ற ஒரு அறிக்கையை நாம் வருடாந்தம் வெளியிடுவோம்.

புறவுண்மை

ஒவ்வொரு விவாத விடயத்தையும் கொள்கை, சட்டம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் என்பவற்றின் மூலம் வழங்கப்படும் அதன் தகுதிப்பாடுகள், சான்று ஆகியவற்றின் அடிப்படையில் நாம் அளவீடுசெய்வோம்.

இணக்கப்பாடு

உரிய சட்டவாக்கத்தின் கீழ் எமக்கு உரித்தளிக்கப்பட்டுள்ள சட்டவாக்கக் கடப்பாடுகளுக்கு அமைய நாம் எமது தீர்மானங்களை மேற்கொள்வோம். ‘அது மாதிரியான’ விடயத் தீர்மானங்களில் உதவியாக அமையும் என நாம் நம்புகின்ற, முன்னர் நாம் பின்பற்றிய அதே அணுகுமுறையைப் பின்பற்றுவதற்கும் நாம் முயற்சிப்போம்.