எம்மைப் பற்றி

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (‘ஆணைக்குழு) இலங்கையில் மின்சாரம் சார்ந்த கைத்தொழிலின் பொருளாதார, பாதுகாப்பு, தொழில்நுட்ப ரீதியான ஒழுங்குறுத்துகையில் கண்காணிப்பை மேற்கொண்டு தேசிய பொருளாதாரத்தில் மிக இன்றியமையாத ஒரு பங்கை வகித்து வருகின்றது. இதே நேரம் நீரும் பெற்றோலியமும் சார்ந்த கைத்தொழில்களும் விரைவில் எமது செயல்நோக்கில் வரவிருக்கின்றன. ஆணைக் குழு, தற்பொழுது உராய்வுநீக்கி எண்ணெய் உப துறைக்கான மறைமுக ஒழுங்குறுத்தும் அமைப்பாகவும் தொழிற்பட்டு வருகின்றது.

நாம் வழங்குகின்ற முக்கியமான சேவைகளுக்கு மத்தியில், இலங்கையின் மின்சக்தித் துறையில் போதிய முதலீடுகள், பெரும் கிடைப்புத்தன்மைகள், வினைத்திறன் வாய்ந்த மின்சார விநியோகம், மின்சார நுகர்வோருக்கான மின்சார சார் சேவைகளின் மேம்பட்ட தரம் என்பன காணப்படுகின்றன என்பதில் ஆணைக்குழு உறுதிகொள்ளுகின்றது. இந்த ஆணைக்குழு மின்னுற்பத்தி, மின்சார செலுத்துகை, மின்சாரப் பகிர்ந்தளிப்பு, மின்சார விநியோகம் மற்றும் மின்சாரப் பாவனை ஆகிய விடயங்களையும் ஒழுங்குறுத்துகின்றது.

இ.பொ.ப.ஆ குழு எவ்வாறு நிருவகிக்கப்படுகின்றது?

இலங்கைப் பாராளுமன்றத்தினால் 2002 இன் 35 ஆம் இலக்க-(ஆங்கில மொழியில்) இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட இந்தப் பொதுப் பயன் பாடுகள் ஆணைக்குழு (இ.பொ.ப.ஆ) நாட்டிலுள்ள சில பௌதீக உட்கட்டமைப்பு சார்ந்த கைத்தொழில்களை ஒழுங்குறுத்துகின்ற ஒரு பல துறை மேற்பார்வை அமைப்பாக விளங்கி,இன்றியமையாத ஒரு பங்களிப்பைச் செய்துவருகின்றது. இந்த இ.பொ.ப.ஆ குழு 2003 ஆம் ஆண்டில் இயங்கத் தொடங்கியது. அந்த நேரம், இதன் முதலாவது குழு ஆணையாளர்களும் பணிப்பாளர் நாயகமும் நியமிக்கப்பட்டனர்.

ஐந்து உறுப்பினர்கள் அடங்கிய இந்த ஆணைக்குழு, அரசியலமைப்பு சபையின் இணக்கத்துடன் கொள்கை அபிவிருத்தி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சிரினால் நியமிக்கப்படுகின்றது. இதன் ஆணையாளர்களின் பதவி காலம் 5 வருடங்களாகும். அதே நேரம் பொறியியல், சட்டம் மற்றும் வர்த்தக முகாமைத்துவம் ஆகிய தொழில்சார்ந்த ஒவ்வொரு துறைகளிலிருந்தும் ஆகக்குறைந்தது ஒரு உறுப்பினராவது இந்த ஆணைக் குழுவில் உள்ளடங்குதல் வேண்டும்.

ஒழுங்குறுத்துகை பற்றிய கைந்நூல்

இந்த ஒழுங்குறுத்துகை பற்றிய கைந்நூல்ஆணைக்குழுவின் தொழிற்பாடுகளை நிருவகிக்கின்ற செயல்முறை விதிக்கோவையை பிரதிநிதிப்படுத்தும் அக்கறையுடைய தரப்புகளுக்கான ஒரு வழிகாட்டியாக விளங்குகின்றது.